ஆஸ்திரேலியாவிற்கு பறக்க ரோஹித் சரமாவிற்கு கிடைத்த க்ரீன் சிக்னல் – ஆனாலும் சின்ன பிரச்சனை இருக்கு

Rohith
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நடப்பு 2020 ஆம் ஆண்டிற்கான 13வது ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் கேப்டனாக தலைமை தாங்கிய ரோகித் சர்மா ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தினார். இந்த தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த அவர் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து அதன் பின்னர் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதி சுற்று போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வெற்றியை தேடி தந்தார். அதன் பிறகு அவரது காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் பெறவில்லை.

rohith

- Advertisement -

ஆனால் டெஸ்ட் தொடரில் மட்டும் இடம் பெற்றிருக்கிறார் என பிசிசிஐ அறிவித்தது. ஆனாலும் அவர் ஆஸ்திரேலியா செல்லாமல் நேராக இந்தியா திரும்பி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் காயத்திற்க்கான பயிற்சியும், சிகிச்சையையும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தற்போது இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிவிப்பில் :

ரோகித் சர்மா ஃபிட்னஸ் டெஸ்டில் தகுதி பெற்று விட்டார். மேலும் இனிவரும் போட்டிகளிலும் அவர் விளையாடலாம் என்று அவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த தகவல் பிசிசிஐயின் தேர்வுக்குழு கமிட்டி மூலமாக தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய சீரியஸில் ரோகித் சர்மா இடம் பெற வேண்டும் என்றால் உடல் தகுதியை நிரூபித்தாக வேண்டும் என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கடந்த பல நாட்களாக பெங்களூரில் தங்கி இருந்த ரோகித் சர்மா தற்போது இன்று தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இதன் மூலமாக அவர் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடரில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

rohith 1

மேலும் தற்போது இந்த தொடரில் அவர் பங்கேற்பதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரோகித் சர்மா என்னதான் தேர்ச்சி பெற்றாலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை தவற விட வேண்டிய வாய்ப்பு உண்டாகியுள்ளது. ஏனெனில் அவர் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டாலும் அங்கு சென்றவுடன் குவாரன்டைன் நாட்களை முழுமையாக கடக்க வேண்டும். அதன்படி ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் குறைந்தது பத்து நாட்களாவது குவாரண்டின் நாட்களில் இருப்பார்.

- Advertisement -

அதனால் வருகிற 17-ஆம் தேதி துவங்கவுள்ள முதல் போட்டியை தவறவிடும் அவர் அதற்கு அடுத்த டெஸ்ட்டையும் தவற விடுவார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியுடன் கோலி நாடு திரும்புவதால் அவரது இடத்தில் ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்துக்களை முன்வைத்த நிலையில் தற்போது முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

Rohith-2

மேலும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் விளையாட எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்பதால் ரோகித் சர்மா நிச்சயம் விரைவில் ஆஸ்திரேலியா புறப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது ரோகித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement