ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ரோஹித். சர்வதேச அரங்கில் புதிய சாதனை – விவரம் இதோ

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

Rohith 1

- Advertisement -

இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தொடக்க வீரரான ரோகித் சர்மா ஒரு மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்தார். இந்த போட்டியில் 65 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் சூப்பர் ஓவரில் 15 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இப்போட்டியின் ரோகித் சர்மா 48 அடித்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த துவக்கவீரர் பட்டியலில் இணைந்தார். ஒட்டுமொத்தமாக 21 ஆவது வீரர் என்றாலும், இந்திய அணி சார்பாக இந்த சாதனையை எட்டிய 4 ஆவது வீரராக சாதனை புரிந்தார். இதற்கு முன்னர் சச்சின், சேவாக் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் துவக்க வீரர்களாக 10000 ரன்களை அடித்துள்ளார்கள்.

Rohith

இந்நிலையில் இந்த சாதனையை அதிவேகமாக எட்டிய வீரர்களின் பட்டியலில் 2 ஆவது இடத்தினை பிடித்தார். ரோஹித் 219 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 214 இன்னிங்சில் 10000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான போது மிடில் ஆர்டரில் தவித்த ரோஹித் துவக்க வீரராக களமிறங்கியதற்கு அப்புறம் வேறலெவலில் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement