- Advertisement -

Rohith Sharma : சதமடித்து பல சாதனைகளை உடைத்து எறிந்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் எட்டாவது போட்டி நேற்று சவுத்தாம்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், டூப்ளிஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் கேப்டன் டூபிளிஸ்சிஸ் 38 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் சார்பாக சாஹல் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதன்பின் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 122 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அடித்த சதம் பல்வேறு சாதனைகளை உடைத்து இருந்துள்ளது. அதில் குறிப்பிட்டவை : உலக கோப்பை அரங்கில் ரோகித் சர்மா நடித்த இரண்டாவது சதம் இதுவாகும். மேலும் உலக கோப்பை அரங்கில் அதிக சதம் அடித்த அணி என்ற பெருமையை ரோகித் சர்மா அடித்த சதம் மூலம் இந்திய அணி பெற்றது. ரோகித் சர்மா அடித்த சதம் இந்திய அணி வீரர்கள் மொத்தமாக நடித்த 26 வது சதம் ஆகும்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒருநாள் போட்டியில் 22 சதங்களை அடித்துள்ளார். எனவே ரோகித் சர்மா அடித்த இந்த சதம் கங்குலியை தாண்டி அவரை மூன்றாவது இடத்திற்கு எடுத்து சென்றது. ரோகித் சர்மாவுக்கு இது 23 வது ஒருநாள் சதம் ஆகும். ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சார்பாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் 49 சதம் அடித்து முதலிடத்திலும் அதற்கடுத்த இடத்தில் கோலி 41 சதம் அடித்து இரண்டாவது இடத்திலும் அதற்கடுத்து ரோஹித்தும் தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by