- Advertisement -
ஐ.பி.எல்

இதெல்லாம் தோனியால் கூட சொல்லிக் கொடுக்க முடியாது.. மும்பை மூட்டையை கட்டும் முன்.. பாண்டியா பேட்டி

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக வெளியேறும் தருவாயில் உள்ளது. இந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த எதிர்ப்புக்கு மத்தியில் கேப்டனாக செயல்பட்ட பாண்டியா தலைமையில் 11 போட்டிகளில் 3 வெற்றியை மட்டுமே பெற்ற மும்பை 8 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ள அந்த அணி அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் செல்வதற்கு வெறும் 0.006% மட்டுமே வாய்ப்புள்ளது.

- Advertisement -

பாண்டியா கருத்து:
அதனால் மே 6ஆம் தேதி ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் தோற்றால் மும்பை அணி அதிகாரப்பூர்வமாக மூட்டை முடிச்சுடன் வெளியேற வேண்டிய பரிதாப நிலையில் உள்ளது. மும்பையின் இந்த தோல்விக்கு பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் கேப்டனாகவும் சொதப்பலான முடிவுகளை எடுத்த ஹர்திக் பாண்டியா தான் முக்கிய காரணம் என்று இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் இது போன்ற தோல்விகள் தான் மிகப்பெரிய பாடத்தை கொடுக்கும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். அதை எம்.எஸ். தோனி போன்ற தனது ரோல் மாடலால் கூட சொல்லிக் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கும் பாண்டியா இது பற்றி ஹைதராபாத் போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு. “பொறுப்பு வாரியாக நான் எப்போதும் பொறுப்பை விரும்பும் ஒருவனாக இருக்கிறேன்”

- Advertisement -

“ஏனெனில் நீங்கள் உங்களது பொருட்களை சொந்தமாக வைத்திருக்கும் போது அது உங்களுக்கு தனிப்பட்டதாக மாறும். எனவே என்னைப் பொறுத்த வரை இது என் தவறுகளை சொந்தமாக்கி அதில் உள்ள தோல்விப் பாடங்களை கற்பதற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்வது பற்றியதாகும். அந்த அனுபவத்தை யாராலும் உங்களுக்கு கற்பிக்க முடியாது”

இதையும் படிங்க: தோனி – ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஜோடியாக இணைந்து படைத்த மோசமான சாதனை – 12 வருடத்தில் இதுவே முதல்முறை

“உங்கள் நெருங்கிய உதவியாளர் அல்லது ரோல் மாடல் அல்லது மஹி பாய் போன்றவரால் கூட கற்றுத் தர முடியாது. எனவே சில தோல்விகளை வைத்து உங்களால் அனுபவ பாடத்தை கற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் தோல்விகள் கிடைக்கும் போது தான் உங்களுடைய வேலை என்ன? நம்மால் எதில் சிறப்பாக செயல்பட முடியும்? என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் துணை கேப்டனுடைய பாண்டியா செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -