ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் போட்டியில் முன்னணி வீரர் விளையாடுவது சந்தேகம் – காரணம் இதுதான்

Ind-2

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையே முதலாவது போட்டி நாளை 14ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்திய அணி வீரர்கள் குறைவான நேரம் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஏனெனில் நேற்று மும்பையில் இந்தி வீரர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது அதன் காரணமாக இந்திய வீரர்களால் பயிற்சியில் அதிக நேரம் இருக்க முடியவில்லை. மேலும் இந்த பயிற்சி நேரத்தின் போது இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா காயம் அடைந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரின் காயம் நாளைக்குள் குணமாகுமா ? என்பதை பொருத்தே அவர் நாளைய போட்டியில் களமிறங்குவாரா ? என்று தெரியவரும்.

Rohith-1

மேலும் தற்போது ரோகித் சர்மாவின் காயம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. அவருடைய உடல் தகுதி இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் நாளைய போட்டியில் மோதுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றும் தெரிகிறது.

- Advertisement -