மழை நின்று போட்டி நடந்தால் இன்று வரலாற்றில் இடம்பிடிக்க இருக்கும் ரோஹித் – விவரம் இதோ

Ind-2

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Ground

இந்நிலையில் நேற்றிரவு ராஜ்கோட் மைதானத்தில் கனமழை பெய்ததால் இன்றைய போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மைதான நிர்வாகிகள் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

அப்படி மழை நின்று இன்றைய போட்டி நடைபெற்றால் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித்துக்கு இது 100 ஆவது டி20 போட்டியாக அமைய உள்ளது. இந்திய அணி சார்பாக சர்வதேச டி20 போட்டியில் முதல் நபராக 100 டி20 போட்டியில் விளையாடிய வீரர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைக்க உள்ளார்.

Rohith-1

சர்வதேச அளவில் ரோஹித்துக்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக் (111) டி20 போட்டியில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 100 ஆவது போட்டியில் ரோஹித் கேப்டனாகவும் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -