ரசிகரால் கீழே விழுந்த ரோஹித். மைதானத்திற்குள் புகுந்த பாதுகாவலர்கள் – முழுவிவரம் இதோ

Rohith-fan

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி இன்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

Rohith fan 1

இன்னும் 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை நான்காம் நாள் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களை மீறி மைதானத்திற்குள் ரோகித் சர்மாவை பார்ப்பதற்காக நேராக ஓடிவந்தார்.

ரோகித் சர்மாவின் அருகே வந்த அந்த ரசிகர் ரோகித் சர்மாவின் காலில் விழ அதனை எதிர்பாராத ரோகித் சர்மா பேலன்சை இழுந்து அவர் மீது தவறி விழுந்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதேசமயம் மைதானத்தின் வெளியே இருந்த பாதுகாவலர்கள் உள்ளே ஓடி வந்து அந்த ரசிகர் குண்டுகட்டாக வெளியேற்றினர்.

rohith fan 2

இது போன்ற ரசிகர்களின் செயல் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ரோகித் சர்மாவின் ரசிகர் இன்று செய்த செயல் மைதானத்தில் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது. மேலும் கீழே விழுந்து எழுந்த ரோகித் சர்மா அவரைப் பார்த்து சிரித்தபடி வழி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.