தோனியின் சாதனையை முறியடிக்க தவறிய ரோஹித் சர்மா – இது தெரியுமா உங்களுக்கு?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து 2-வது ஒருநாள் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

Cup

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்கிற காரணத்தினால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் தங்களது தீவிரத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள இந்த இரண்டாவது போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்கள் மட்டுமே குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்துள்ளது.

rohith 1

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டனான தோனியின் ஒரு சாதனையை முறியடிக்க எளிய வாய்ப்பு இருந்தும் அதனை தவறு விட்டுள்ளார். அதன்படி ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை இந்தியா சார்பாக தோனி வைத்துள்ளார். இதுவரை இந்திய மண்ணில் தோனி 113 இன்னிங்ஸ்களில் விளையாடி 116 சிக்ஸர்களை விளாசி உள்ளார்.

- Advertisement -

அதே வேளையில் ரோகித் சர்மா 67 போட்டிகளில் 116 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் மேலும் ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் தோனியின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்தபோது 8 பந்துகளை சந்தித்த ரோஹித் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனால் அந்த சாதனையை முறியடிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : தோனி 2008 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டபோது நடந்தது இதுதான் – ரிச்சர்ட் மேட்லி

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் 245 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து தோனி 229 சிக்சருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். சொந்த மண்ணில் அதிக சிக்சர்களை அடித்து வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இடத்தில் க்றிஸ் கெயில் 147 சிக்ஸர்களுடன் இருக்கிறார். அவரை தொடர்ந்து மார்ட்டின் கப்டில் 130 சிக்சர்களுடனும், பிரண்டன் மெக்கலம் 126 சிக்சருடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement