தோனி 2008 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டபோது நடந்தது இதுதான் – ரிச்சர்ட் மேட்லி

Madley
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறையும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர். ஆனாலும் இடையில் இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்டது. ஆனால் மும்பை அணி அனைத்து சீசன்களில் விளையாடியுள்ளது.

ipl

- Advertisement -

மும்பை அணியை பொறுத்தவரை ஏகப்பட்ட கேப்டன்கள் மாறி தற்போது இறுதியாக ரோகித் சர்மா தொடர்ச்சியான கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால் சென்னை அணியை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே மகேந்திர சிங் தோனி மட்டுமே கேப்டனாக இருந்து வருகிறார். அவரது தலைமையில் கடைசியாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரோடு சேர்த்து நான்கு முறை சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னை அணியில் தோனி தேர்வானது எப்படி என்று ஐபிஎல் தொடரின் ஏலம் விடும் நபர் ரிச்சர்ட் மேட்லி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமான தோனியை ஏலத்தில் விடும் போது என்ன நடந்தது என்பது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

madley 1

இதுகுறித்து அஷ்வின் உடனான நேர்காணலில் அவர் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற தருணம் அது. அதற்கடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கும்போது தோனியை எடுக்க பல அணிகள் போட்டா போட்டி போட்டன.

- Advertisement -

ஆனால் இறுதியில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே தோனியை எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. இருப்பினும் சென்னை அணிக்கு ஒரு மிகப்பெரிய நட்சத்திர வீரர் தேவைப்பட்டதால் பெரிய வீரரை தேர்வு செய்யும் நோக்கில் சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்து தோனியை சென்னை அணி வாங்கியது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஜொலிக்க தவறிய 3 வெளிநாட்டு வீரர்கள் – லிஸ்ட் இதோ

குறிப்பாக சென்னை மும்பை மோதும் முன்னர் பல அணிகள் தோனிக்காக மோதின. இருப்பினும் தொகை அதிகமாக அதிகமாக மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேகடும் போட்டி நிலவியது. இறுதியில் சென்னை அணி அவரை ஏலத்தில் வாங்கியது என தோனியின் முதல் ஏலம் குறித்து ரிச்சர்ட் மேட்லி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement