ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஜொலிக்க தவறிய 3 வெளிநாட்டு வீரர்கள் – லிஸ்ட் இதோ

Eng-ipl
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளதால் அவர்களில் தரமான வீரர்களை வாங்க அனைத்து 10 அணிகளும் தயாராக உள்ளன.

Ganguly-ipl
IPL MI

இந்த வருடம் ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷான் போன்ற இந்திய வீரர்களும் டேவிட் வார்னர் போன்ற பல வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என கருதப்படுகிறது. இந்த ஏலத்தை ஐபிஎல் ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

சோபிக்க தவறிய சீமை சரக்கு:
பொதுவாகவே இந்தியாவில் எந்த ஒரு துறையாக இருந்தாலும் வெளிநாட்டு சரக்கு மற்றும் வெளிநாட்டவர்களுக்கு மதிப்பு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஐபிஎல் அணிகள் மற்றும் ரசிகர்களிடையே வெளிநாட்டு வீரர்களுக்கு என்றால் எப்போதுமே ஒரு தனி மவுசு காணப்படுகிறது. இதனால் இந்திய வீரர்களை விட பல கோடி ரூபாய்களை செலவழித்து அவர்களை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் வாங்குகின்றன.

Warner

இருப்பினும் இந்திய மண்ணில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் எல்லா வெளிநாட்டு வீரர்களும் சிறப்பாக செயல்பட முடிவதில்லை. அதற்கு காரணம் பெரும்பாலான நேரங்களில் தங்கள் சொந்த நாடுகளில் விளையாடி பழகிய வெளிநாட்டு வீரர்கள் இந்திய கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை உட்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்படுவதற்கு முன்பே ஐபிஎல் தொடர் முடிந்து விடும். மேலும் எந்த ஒரு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும் அவர் தங்களுக்கு ஐபிஎல் கோப்பையை பெற்று தருவார் என்ற கனவுடன் பல கோடி ரூபாய்களை செலவழித்து ஐபிஎல் அணிகள் வாங்குகின்றன.

- Advertisement -

ஆனால் அவர்களால் ஒரு சில போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று தர முடிகிறதே தவிர முழு சீசனையும் வெற்றி பெற்று தர முடிவதில்லை. ஏனெனில் அவர்களும் மனிதர்கள் தானே ! அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி பெரிய அளவில் ஜொலிக்க தவறிய சில நட்சத்திர வீரர்கள் பற்றி பார்ப்போம்.

1. கிறிஸ் மோரிஸ் (2021) : ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலத்தில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிசை வாங்க மும்பை, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளிடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் 16.25 கோடிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட கிரிஸ் மோரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். அதை தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் பந்து வீச்சில் 11 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்டுகளை எடுத்து சுமாரான செயல்பாட்டை மட்டுமே வெளிப்படுத்தினார்.

- Advertisement -

2. பட் கமின்ஸ் (2020) : ஆஸ்திரேலியாவின் நட்சத்திர அதிரடி வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் கடந்த ஐபிஎல் 2020 சீசனில் 15.50 கோடிகளுக்கு கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். முதலில் அவரை வாங்க டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய போட்டி போட இறுதியில் கொல்கத்தா இடையில் புகுந்து வெற்றிகரமாக வாங்கியது.

Cummins 2

அதை தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்ற அவர் வெறும் 12 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார். இருப்பினும் அவரை நம்பிய கொல்கத்தா நிர்வாகம் அவரை அடுத்த சீசனுக்கும் தக்க வைத்தது. அதன்பின் நடந்த ஐபிஎல் 2021 தொடரிலும் அவர் 7 போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டதால் தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை விடுவித்து விட்டது.

3. கைல் ஜமிசன் (2021) : நியூசிலாந்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜமிசனை வாங்க கடந்த வருடம் டெல்லி, பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இறுதியில் 15 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு பெங்களூரு வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் பங்கேற்ற அவர் வெறும் 9 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டதால் இந்த முறை அவரை பெங்களூர் அணி நிர்வாகம் தக்க வைக்க வில்லை.

Advertisement