துவக்க வீரர்களாக சர்வதேச ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைத்த ரோஹித் தவான் கூட்டணி – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப்போட்டி இன்று தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

toss

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 37 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின்னர் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 62 பந்துகளில் 78 ரன்களையும், ஹர்டிக் பாண்டியா 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தனர். இறுதி நேரத்தில் க்ருனால் பாண்டியா மற்றும் தாக்கூர் ஆகியோர் முறையே 25 மற்றும் 30 ரன்களை அடிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது.

dhawan 1

இதனால் தற்போது 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் 103 ரன்கள் சேர்த்து பாட்னர்ஷிப் அமைத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றைப் நிகழ்த்தியுள்ளனர். அந்த சாதனையை இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான கில்க்ரிஸ்ட் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் இணைந்து ஒருநாள் போட்டிகளில் 16 முறை 100 ரன்கள் கூட்டணி அமைத்து இருந்தனர்.

dhawan

அதனை இன்றைய போட்டியில் கடந்த ரோஹித் மற்றும் தவான் ஜோடி 17-வது முறையாக 100 ரன்களை குவித்துள்ளது. இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 21 முறை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை துவக்க வீரர்களாக அமைத்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement