அட என்ன ஒரு புத்திசாலித்தனம். ஸ்மித் மற்றும் லாபுஷேனை ஏமாற்றிய ரோஹித்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 340 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீரரான வார்னரின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தது.

அதன்பிறகு ஸ்மித் களம் புகுந்தார். அவர் இறங்கியதில் இருந்து சிறப்பாகவே ஆடி வந்தார். பிறகு பின்ச் ஆட்டமிழக்க லாபுஷேன் பேட்டிங் செய்ய வந்தார். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக சிறப்பாக விளையாடினார்கள். முதன் முறையாக ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்த லாபுஷேன் சிறப்பாகவே விளையாடி 47 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். ஸ்மித்தும் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேற ஆஸி அணியின் தோல்வி உறுதியானது.

- Advertisement -

இவர்கள் இருவரும் ஆடிய விதம் அணியை வெற்றி நோக்கி கொண்டு சென்றது என்றே கூறவேண்டும். பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அணியை வெற்றிபெற வைத்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த சம்பவமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது குல்தீப் யாதவ் வீசிய பந்தை ஸ்மித் கீப்பருக்கு பின்புறம் தட்டிவிட அந்த பந்து பவுண்டரி லைனை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ரோகித் சர்மா கவர் திசையிலிருந்து வந்து பந்தை பிடித்து எரிவது போல நடித்தார். ஆனால் உண்மையில் பந்து பின்னால் இருந்த வீரர் கைக்கு சென்றது அவரே அந்த பந்தை பிடித்து கீப்பருக்கு த்ரோ செய்தார். ஆனால் ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகியோர் ரன் ஓடாமல் தடுப்பதற்காகவே ரோஹித் த்ரோ செய்வது போல ஆக்சன் செய்தார். நல்லவேளை அவரின் இந்த செயலை அம்பயர்கள் கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement