4 மாசமா என்னால முடியல. எப்போடா பேட்டிங் பண்ணுவன்னு இருக்கு – ஆதங்கத்தை வெளிப்படுத்திய நச்சத்திர வீரர்

Ind
- Advertisement -

இந்திய அணி கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. தற்போதுதான் இரண்டு தினங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எந்த ஒரு போட்டிகளும் இல்லாமல் இருந்துள்ளது.

IND-2

- Advertisement -

இதுதான் கிரிக்கெட் வரலாற்றிலேயே நான்கு மாதங்கள் ஒரு போட்டி கூட விளையாட படாமல் இருந்த காலகட்டம் ஆகும். இந்நிலையில் கரோனா வைரஸ் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது மக்களும் அதனுடன் வாழ பழகிக் கொண்டனர். சமூக இடைவெளி விட்டும் ஒருவருக்கொருவர் இடைவெளியை கடைப்பிடித்தும் வைரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியும் இப்படித்தான் அரசியல் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் துவங்கியதை தொடர்ந்து இதுகுறித்து ரோஹித் சர்மா மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோர் . இதுகுறித்து ரஹானே…

மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் களத்தில் இறங்க என்னால் காத்திருக்க முடியாது. வெகு சீக்கிரமாக வந்து விடுவேன் என்று ட்விட் செய்துள்ளார்.

Rohith

அதேபோல் ரோகித் சர்மா கிரிக்கெட் மீண்டும் துவங்கியிருக்கிறது. இங்கிலாந்திலிருந்து வரும் காட்சிகளை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருவழியாக கிரிக்கெட் மீண்டும் துவங்கிவிட்டது. இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் ஷர்மா.

Advertisement