மும்பை அணியின் தூண் கைரன் பொல்லார்டுக்கே எச்சரிக்கை கொடுத்த ரோஹித் சர்மா – எதுக்குன்னு பாருங்க

Pollard
- Advertisement -

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி எவ்வாறு சறுக்கலை சந்தித்து வருகிறதோ அதே போன்று 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஏனெனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணியானது அந்த நான்கு போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஜாம்பவான் அணிகளாக திகழும் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளுமே தற்போது பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.

Mumbai Indians MI

- Advertisement -

அதிலும் குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றே கூறலாம். ஏனெனில் இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்ததால் மோசமான தோல்வியை சந்தித்தது.

சூரியகுமார் யாதவ் மட்டும் ஒருபுறம் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த அரைசதங்களை அடித்து வர மற்ற எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய ரன் குவிப்பை வழங்காத நிலையில் உள்ளனர். இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசிய ரோகித் சர்மா மும்பை அணியின் பேட்ஸ்மேன் கடுமையாக எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் 2 வெளி நாட்டு வீரர்களுடன் தான் களம் இறங்கினோம். நமக்கு வேறுவழியில்லை அணிக்கு எது தேவை படுகிறதோ அப்படித்தான் அணியை கட்டமைக்க வேண்டும்.

pollard 2

சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது அணி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கை நாம் சரி செய்தே ஆக வேண்டும். இந்த போட்டியில் நான் நீண்ட நேரம் விளையாட தான் தயாராக வந்தேன். ஆனால் தவறான ஷாட் காரணமாக ஆட்டம் இழந்து வெளியேறி விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டெத் ஓவர்களில் அதிக ரன்களை அடிக்கும் வீரர்கள்தான் அணிக்கு தேவை.

- Advertisement -

தேவைப்பட்டால் அதற்கேற்றார்போல் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அடுத்த போட்டியில் பேட்டிங் ஆர்டரில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா குறிப்பிட்டது கைரன் பொல்லார்டை தான் என்று சில விவாதங்களும் சமூகவலைதளத்தில் உள்ளன.

இதையும் படிங்க : ஒரு வெற்றி கூட வரல. அதுக்குள்ள வரலாற்றில் படுமோசமான அவப்பெயரை பெற்ற ரவீந்திர ஜடேஜா

ஏனெனில் மிகப்பெரிய பவர் ஹிட்டரான பொல்லார்டு இந்த தொடரில் தொடர்ந்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதிலும் குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் அவர் டக் அவுட்டானது ரோகித் சர்மாவை மிகப்பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாகவே ரோஹித் சர்மா பேட்ஸ்மேன்களை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement