MI vs SRH : மும்பை இந்தியன்ஸ்ஸோட பலமே அவங்கதான். அவங்கள நாமதான் பாத்துக்கனும் – வெற்றிக்கு பிறகு ரோஹித் பேட்டி

Rohit Sharma 1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

MI vs SRH

- Advertisement -

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : எனக்கு ஹைதராபாத் மைதானத்தில் நிறைய நினைவுகள் உள்ளன.

ஏனெனில் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் நான் மூன்று ஆண்டுகள் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளேன். அதிலும் ஒரு முறை நாங்கள் இங்கு கோப்பையும் வெற்றி பெற்றுள்ளோம். எனவே இங்கு விளையாடுவதில் எனக்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி. மும்பை அணியை பொறுத்தவரை தற்போது இளம் வீரர்கள் தான் மிகவும் முக்கியம். அவர்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கான முக்கியத்துவத்தை அளித்தால் அதுவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலத்தை தரும்.

Arjun Tendulkar

இந்த ஐபிஎல் தொடரிலும் இரண்டு இளம் வீரர்கள் மும்பை அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவர்களையும் நாங்கள் தொடர்ச்சியாக ஆதரிக்க போகிறோம். இந்த போட்டியில் நான் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ததாக உணர்கிறேன். ஆரம்பத்திலேயே ரன்களை அடித்து விட்டால் பவர்பிளே முடிந்து நம்மால் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியும்.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக திலக் வர்மாவை கடந்த சீசனில் இருந்து பார்த்து வருகிறோம். அவரால் என்ன முடியும் என்பது நன்றாகவே தெரியும். அவர் பவுலர்களை பார்த்து பெரிய ஷாட்டுகளை அடிப்பதில்லை. பந்தை மட்டுமே பார்த்து எந்த பந்தை எவ்வாறு விளையாடலாம் என்று பந்திற்க மரியாதை கொடுத்து விளையாடுகிறார்.

இதையும் படிங்க : IPL 2023 : என்னா மனுஷன்யா, வாங்கிய சம்பளத்தை தன்னை போன்ற ஏழை வீரர்களுக்கு அப்படியே தனமாக கொடுத்த ரிங்கு சிங்

அதேபோன்று அர்ஜுன் டெண்டுல்கர் எங்களது அணியில் மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறார். தற்போது பந்துவீச்சிலும் நல்ல நம்பிக்கையுடன் பந்து வீசுகிறார். அவருடைய திட்டங்கள் தெளிவாக இருக்கிறது. புது பந்தில் ஸ்விங் செய்தும், கடைசி ஓவர்களில் யார்க்கர் வீசியும் தனது பந்துவீச்சு திட்டங்களில் தெளிவாக இருக்கிறார் என ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement