IND vs AUS : ஜெயிச்சாலும் நாங்க பண்ணும் அந்த தப்பை சரிசெய்ஞ்சே ஆகனும் – வெற்றி பிறகு ரோஹித் பேட்டி

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த வேளையில் நேற்று ஹைதராபாத் மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

INDvsAUS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இந்திய அணிக்காகவும் சரி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் சரி இந்த மைதானத்தில் நாங்கள் நல்ல நினைவுகளை வைத்துள்ளோம்.

Virat Kohli Suryakumar Yadav

இந்த தொடரில் ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் ஒவ்வொரு போட்டிகளில் தங்களது பொறுப்பை உணர்ந்து அவர்களது பங்களிப்பை அளித்து வெற்றியை பெற்று தந்ததில் மகிழ்ச்சி. இந்திய அணியின் நிர்வாகத்தையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் சிறிய சிறிய குறைகள் இருக்கத்தான் செய்யும். அதனை சரி செய்ய வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

அந்த வகையில் எங்களுடைய வாய்ப்பை எடுத்துக்கொண்டு தற்போது வெற்றியுடன் முடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த தொடரில் நாங்கள் பெற்ற வெற்றி சரியான நேரத்தில் வந்துள்ளது. இருந்தாலும் ஒரு சில இடங்களில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் தோற்கும் போதெல்லாம் அவங்ககிட்ட திட்டும் அடியும் வாங்குறேன் – ரமீஸ் ராஜா கவலையுடன் பேசியது இதோ

அந்த வகையில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் டெத் ஓவர்களில் இன்னும் சிறப்பாக வீச வேண்டியது. அவசியம் அவர்கள் இருவரும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு மீண்டும் சிறப்பாக திரும்புவார்கள் என்று நினைக்கிறேன். இந்த வெற்றியை அடுத்த தொடரிலும் நாங்கள் தொடர விரும்புகிறோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement