பாகிஸ்தான் தோற்கும் போதெல்லாம் அவங்ககிட்ட திட்டும் அடியும் வாங்குறேன் – ரமீஸ் ராஜா கவலையுடன் பேசியது இதோ

Ramiz-Raja
- Advertisement -

இந்தியாவைப் போலவே கிரிக்கெட்டை மிகவும் ஆழமாகவும் உணர்வு பூர்வமாகவும் நேசிக்கும் அண்டை நாடான பாகிஸ்தான் அதில் வெற்றி பெறும் போது தலையில் வைத்து கொண்டாடுவதும் தோல்வியை சந்திக்கும் போது கடுமையான விமர்சிப்பதும் வழக்கமாகும். அந்த வகையில் விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் தயாராகி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் பரம எதிரியான இந்தியாவிடம் தோற்றாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் வென்று பழிதீர்த்து பைனலுக்கு முன்னேறியது. ஆனால் பைனலில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்கும் தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இலங்கையிடம் தோற்ற அந்த அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

- Advertisement -

குறிப்பாக உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களாக கருதப்படும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது செல்பிஷ் என சொல்லும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வீரர்களைப் போலவே அந்த அணி தோற்கும் போது அந்நாட்டைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாவது வழக்கமாகும். ஏனெனில் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்று வாய்ச்சவடால் பேசி இறுதியில் தோற்கும் போது அதற்கான கிண்டல்களை வட்டியும் முதலுமாக எதிரணி ரசிகர்கள் கொடுத்து விடுவார்கள்.

எப்படியாவது ஜெயிச்சுருங்க:
அந்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா நிறைய தருணங்களில் தங்களது அணி வெல்லும் என்று வாய் விட்டு இறுதியில் மாட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது. சமீபத்திய ஆசிய கோப்பையில் கூட இந்தியாவிடம் தோற்ற பின் கிண்டல்களுக்கு உள்ளான அவர் அந்த கோபத்தை இந்திய பத்திரிகையாளரின் மொபைல் போனை பிடுங்கி அத்துமீறி நடந்து கொண்டார். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியிலும் பாகிஸ்தான் வெல்லும் என சவால் விட்டு இறுதியில் தோற்கும் போது தனது வீட்டில் உள்ள குடும்பத்தினரும் ஊடகங்களும் தம்மை கடுமையாக திட்டுவதாக ரமீஷ் ராஜா வேதனையுடன் கூறியுள்ளார்.

அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் எப்படியாவது வென்று விடுங்கள் என்ற வகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் எங்களது அணியிடம் எப்படியாவது வெல்லுங்கள் என்று கூறியுள்ளேன். இதற்கான எளிமையான காரணம் என்னவெனில் மக்கள் அனைவரும் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் தோற்கும் போது நான் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் நானும் தோற்றுப்போகிறேன்”

- Advertisement -

“அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் தோற்கும் போது என்னை சுற்றி அனைவரும் நின்று அடிப்பதாக நான் உணர்கிறேன். சொல்லப்போனால் நானும் தீவிரமான ரசிகன். அதன் காரணமாக என்னுடைய வீட்டில் அனைவரும் என்னை திட்டுவார்கள். ஏனெனில் இதர சமயங்களில் பாகிஸ்தான் வெல்லும் என்று நான் அவர்களை புண்படுத்தியுள்ளேன். எனவே இந்த விளையாட்டு மட்டுமே மக்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தக்கூடியது. அத்துடன் இது நாட்டின் ஒற்றுமையையும் பலப்படுத்துகிறது” என்று கூறினார்.

Ramiz Raja Sourav Ganguly

அதாவது பாகிஸ்தான் அணி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் சவால் விடுத்து இறுதியில் தோற்கும் போது தனது குடும்பத்தில் அனைவரும் சுற்றி நின்று தம்மை திட்டுவதாக ரமீஷ் ராஜா கூறியுள்ளார். அதிலும் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்று வரும் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் பாகிஸ்தான் பின் தங்கியதால் சொந்த மண்ணிலேயே வெல்ல முடியாத உங்களது அணி ஆஸ்திரேலியாவில் உலக கோப்பையை எங்கே வெல்லப் போகிறது என்று தம்மை விமர்சிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

அதனால் உலகக்கோப்பையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வெல்லுமாறு பாகிஸ்தான் அணிக்கு அவர் வெளிப்படையான கோரிக்கை வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து டி20 தொடரை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா புறப்படும் பாகிஸ்தான் சூப்பர் 12 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான இந்தியாவை வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்வது குறிப்பிடதக்கது.

Advertisement