- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ZIM : ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கியது ஏன். டாஸின் போதே விளக்கம் கொடுத்த – ரோஹித் கூறியது என்ன?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இன்றுடன் நடைபெற்று முடிந்த சூப்பர் 12 சுற்றுகளின் அடிப்படையில் குரூப் ஒன்றில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அந்த வகையில் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவு 5 விக்கெட் 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 61 ரன்களை குவித்தார். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் தனக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்ட அவர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது 5 பந்துகளை மட்டுமே சந்தித்து மூன்று ரன்களில் ஆட்டம் இழந்து தனது வாய்ப்பை வீணடித்து கொண்டார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து டாசின் போதே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார். அதன்படி அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதுமே ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரராக ரிஷப் பண்ட் இருந்தார். எனவே அவருக்கான வாய்ப்பை வழங்க நினைத்தேன். அந்த வகையில் தான் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவதாக ரோகித் சர்மா தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார்.

இதையும் படிங்க : வீடியோ : கபில்தேவ் போல் பறந்து தொடரின் சிறந்த கேட்ச் பிடித்து தெ.ஆ கதையை முடித்த நெதர்லாந்து வீரர் – குவியும் பாராட்டுகள்

ரிஷப் பண்டிற்கு கிடைத்த இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் அடுத்ததாக அரையிறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? அல்லது ரிஷப் பண்ட் விளையாடுவாரா? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

- Advertisement -
Published by