கையில் போடப்பட்ட தையலுடன் பேட்டிங் செய்ய வந்தது எப்படி? – காரணத்தை கூறிய ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் குவித்தது. பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதோடு இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்தது.

Bangladesh

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே கேட்ச் பிடிக்க முயன்று கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் துவக்க வீரரான அவர் பேட்டிங் செய்யவும் வரவில்லை. முதல் பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறிய அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கையில் ஸ்கேன் செய்ததோடு மட்டுமின்றி பந்து பட்டு ரத்தம் வடிந்ததால் அவருக்கு தையலும் போடப்பட்டது.

பின்னர் மீண்டும் மைதானத்திற்கு வந்த ரோஹித் இந்திய அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டம் இழக்க இழக்க ஓய்வறையிலேயே களமிறங்குவதற்காக காத்திருந்தார். அப்படி ஒரு சூழலில் ஏழாவது விக்கெட்டையும் இந்திய அணி இழக்கவே ஒன்பதாவது வீரராக களம் புகுந்த அவர் 28 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என 51 ரன்கள் எடுத்து கடைசி வரை இந்திய அணியை கிட்டத்தட்ட வெற்றிக்கு அழைத்துச் சென்று அருகில் வெற்றியை தவற விட்டார்.

Rohit-Sharma

இருந்தாலும் கையில் போடப்பட்ட தையலுடன் அவரது இந்த போராட்டமான ஒரு இன்னிங்ஸ் அனைவரது மத்தியிலும் பெரிய பாராட்டினை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் கையில் தையல் போடப்பட்ட பின்னரும் விளையாட வந்தது ஏன்? என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

பந்து என் கையில் பட்டதும் கட்டை விரலில் ரத்தம் வடிந்ததோடு சேர்த்து கட்டைவிரலில் இடப்பெயர்ச்சியும் ஏற்பட்டது. ஆனாலும் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவே என்னால் அந்த காயத்துடன் பேட்டிங் செய்ய முடியும் என்று நினைத்தேன். அதனால் தான் கையில் தையல் போடப்பட்ட பின்னரும் நான் பேட்டிங் செய்ய வந்தேன். அதோடு அணிக்கு இந்த வெற்றி என்பது மிகவும் முக்கியம் அதற்காகவும் தான் என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலே களம் இறங்கியதாக ரோகித் சர்மா கூறினார்.

இதையும் படிங்க : அடிப்படை தேர்விலேயே பெரிய தவறு இருக்கு – ஆசிய கோப்பையை தொடர்ந்து தேர்வுக்குழுவின் சொதப்பலை அம்பலமாக்கும் சபா கரீம்

இறுதி இரண்டு பந்தில் வெற்றிக்கு இரண்டு சிக்சர் என்கிற நிலையில் கூட ஒரு சிக்சரை விளாசிய ரோகித் சர்மாவால் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முடியாமல் போனது ஒரு ஏமாற்றம் தான் என்றாலும் அந்த நிலைமையிலும் அவர் பேட்டிங் செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று என கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement