அவருக்கு வாய்ப்பே தரமாட்டேன். வேண்டுமென்றே இளம்வீரரை மறுத்து வரும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohith
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வாறு தடுமாற்றத்தை கண்டு வருகிறதோ அதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்து மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. மும்பை அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இப்படி பெரிய இக்கட்டான நிலையை அந்த அணி முதல் முறையாக சந்தித்துள்ளது.

Mumbai Indians MI

விரைவில் மும்பை அணியின் பிளேயிங் லெவனை சரி செய்தால் மட்டுமே அவர்கள் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என்கிற வேளையில் அணியில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் முதல் சில போட்டிகளாகவே அணியில் இடம்பெற்று வந்த வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் பௌலிங்கின் போது ஏகப்பட்ட ரன்களை விட்டுக் கொடுப்பதனால் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளனர். அதே வேளையில் அவருக்கு பதிலாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ArjunTendulkar

ஆனால் அவ்வேளையில் அவரது இடத்திற்கு மாற்றாக இளம் வீரரான ரமன்தீப் சிங் என்கிற ஆல்ரவுண்டர் மும்பை அணி அறிமுகப்படுத்தியது. இந்த ஒரு மாற்றம் காரணமாக தற்போது அணியில் ஒரு சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் மும்பை அணிக்காக கடந்த சில சீசன்களாகவே இடம்பெற்றுவரும் அவருக்கு இதுவரை பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அவரை ரோகித் சர்மா வேண்டுமென்றே மறுத்து வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 22 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதுடன் கூடுதலாக பேட்டிங் செய்யும் திறன் உடையவர். இதன் காரணமாக அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரோகித்தும் அவரை வேண்டுமென்றே நிராகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதஜய்யும் படிங்க : 4 போட்டிகளில் ஏற்பட்ட தொடர் தோல்வி. சி.எஸ்.கே அணியின் தற்போதைய நிலை என்ன? – கோச் பிளமிங் வெளிப்படை

மறுபுறம் மும்பை அணி நிர்வாகமும் அவரை தடுப்பதாகவும் தெரிகிறது. ஏனெனில் இதுபோன்ற இக்கட்டான வேளையில் சச்சினின் மகன் என்பதற்காக வாய்ப்பு கொடுத்தால் அதுவே அந்த அணிக்கு கெட்ட பெயரை பெற்றுத் தரும் என்பதற்காக அவருக்கு வாய்ப்பு தராமல் வெளியிலேயே அமர வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Advertisement