4 போட்டிகளில் ஏற்பட்ட தொடர் தோல்வி. சி.எஸ்.கே அணியின் தற்போதைய நிலை என்ன? – கோச் பிளமிங் வெளிப்படை

Fleming
- Advertisement -

நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக கேப்டன் தோனி பதவி விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? இந்த அணி எவ்வாறு சவாலை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்த வேளையில் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து சென்னை அணி பெரிய வருத்தத்தை தந்துள்ளது.

CSK vs PBKS 3

- Advertisement -

அதோடு இன்னும் ஒரு சில போட்டிகளில் சென்னை அணி தோல்வியை சந்தித்தால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது உறுதி. இப்படி சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் ரசிகர்கள் மட்டுமின்றி அணியின் நிர்வாகிகளும் தற்போது கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் சிஎஸ்கே போன்ற பெரிய அணி இந்த நெருக்கடிகளை சமாளித்து நிச்சயம் மீண்டு வரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ஆனால் அதனை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இப்படி சென்னை அணி சந்தித்து வரும் தொடர் தோல்விகளால் அணியில் உள்ள நிலைமை குறித்து தற்போது வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

CSK vs PBKS

என்னைப் பொறுத்தவரை ஒரு விடயம் மட்டும் எங்களிடம் தெளிவாக உள்ளது. அணியின் பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என 3 துறையிலுமே முன்னேற்றம் தேவை. சரியான வீரர்களை சீக்கிரமே தயார் செய்து இனி வரும் போட்டிகளில் விளையாட வைக்கவேண்டும். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி எங்களின் மிகவும் மோசமான நிலையை வெளிக்காட்டியுள்ளது. சில முக்கிய வீரர்களின் இடங்களை சரி செய்து சரியான வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறோம்.

- Advertisement -

எனவே இந்த நிலையிலிருந்து சிஎஸ்கே மீள வேண்டுமெனில் அனைத்து வீரர்களும் முன்வந்து தங்களது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும். இந்த தொடரில் இதுவரை நாங்கள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்று சொல்வதைவிட வெற்றிக்கு அருகில் கூட செல்லவில்லை.

இதையும் படிங்க : மீண்டும் ஒரு சர்ச்சை! கோலியை கொந்தளிக்க வைத்த அம்பயர், திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

இந்த தொடர் தோல்விகளால் சென்னை அணியின் வீரர்கள் தற்போது தன்னம்பிக்கையை இழந்து விட்டது போன்று தெரிகிறது. ஆனாலும் எங்களால் முடிந்தவரை மீண்டும் கடின உழைப்பை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற முயற்சிப்போம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement