மீண்டும் ஒரு சர்ச்சை! கோலியை கொந்தளிக்க வைத்த அம்பயர், திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பப் டு பிளேசிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அந்த வகையில் தனது 4-வது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை அந்த அணி நேற்று எதிர்கொண்டது. புனேவில் ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 151/6 ரன்கள் எடுத்தது.

ஏனெனில் அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்ததால் 50/0 என சூப்பரான தொடக்கம் பெற்ற மும்பையை அற்புதமாக பந்துவீசிய பெங்களூரு அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து மடக்கி பிடித்ததால் திடீரென்று 62/5 என அந்த அணி தடுமாறியது. இறுதியில் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் அதிரடியாக 68* ரன்கள் குவித்து மூழ்கிய மும்பையை தனி ஒருவனாக தூக்கி நிறுத்தினார். பெங்களூரு சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஹர்சல் பட்டேல் மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 152 என்ற எளிய இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு அதிரடியாக விளையாடிய இளம் வீரர் அனுஜ் ரவாட் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 36 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 48 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்ததால் 18.3 ஓவர்களில் 152/3 ரன்களை எடுத்த பெங்களூரு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மறுபுறம் பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் சொதப்பிய வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் மும்பை இந்த வருடம் பங்கேற்ற 4 போட்டிகளிலும்தொடர்ச்சியான தோல்விகளைப் பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடுகிறது.

சர்ச்சை அவுட்:
முன்னதாக இப்போட்டியில் 152 ரன்கள் இலக்கை சேசிங் செய்துகொண்டிருந்த பெங்களூரு 50/1 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆரம்பத்திலிருந்தே நிதானத்துடனும் அதிரடியாகவும் ரன்களை குவித்து வந்தார். 9-வது ஓவரில் களமிறங்கிய அவர் நிலைத்து நின்று 4 பவுண்டரிகள் உட்பட 48 ரன்கள் எடுத்து அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததார். அத்துடன் தனது அணியை வெற்றியின் அருகே அழைத்துச் சென்று கொண்டிருந்த அவரை இளம் தென் ஆப்பிரிக்க வீரர் தேவால்ட் பிரேவிஸ் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே அபாரமாக பந்துவீசி எல்பிடபிள்யூ முறையில் விராட் கோலியை தடுமாற வைத்து அம்பயரிடம் அவுட் கேட்டார்.

- Advertisement -

அதை களத்தில் இருந்த அம்பயர் அவுட் கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த விராட் கோலி உடனடியாக ரிவியூ செய்தார். ஏனெனில் அந்தப் பந்து தனது கால்களில் படாமல் பேட்டில் பட்டதாக அவர் உணர்ந்தார். அதை தொடர்ந்து அதை 3-வது அம்பயர் சோதித்த போது பேட் மற்றும் கால் ஆகிய இரண்டையுமே பந்து தொடுவதைப் போல அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் தெரியவந்தது. அந்த நிலையில் வெவ்வேறு திசைகளில் அதை பார்க்க முயற்சித்த அம்பயருக்கு அந்த பந்தை தெளிவாக பார்ப்பதற்கான வாய்ப்பு எந்த திசைகளிலும் கிடைக்கவில்லை.

எனவே பேட்ஸ்மேனுக்கு சாதகமாக எந்தவித ஆதாரமும் கிடைக்காத நிலையில் களத்தில் ஏற்கனவே அம்பயர் அவுட் கொடுத்திருந்த காரணத்தை கையில் எடுத்த 3-வது அம்பயர் மீண்டும் அவுட் கொடுத்தார். இதனால் கடுப்பான விராட் கோலி கோபத்தில் மிகவும் ஆத்திரமடைந்து பேட்டை விளாசிக்கொண்டே அம்பயரை திட்டிக்கொண்டே பெவிலியனுக்கு திரும்பினார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

திட்டி தீர்க்கும் ரசிகர்கள்:
மேலும் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய நடுவரை பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஏனெனில் அந்தப் பந்து முதலில் பேட்டில் தான் பட்டதாக பெரும்பாலான ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இது போன்ற தருணங்களில் பேட்டிலும் காலிலும் பந்து படும் பட்சத்தில் பேட்டில் படுவதாக தான் அம்பயர் எடுத்துக் கொள்ள வேண்டுமென அடிப்படை கிரிக்கெட் விதிமுறை உள்ளது.

இது பற்றி எம்சிசி கிரிக்கெட் விதிமுறை 36.2.2 இல் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “ஒரு பேட்டரின் காலிலும் பேட்டிலும் ஒரே நேரத்தில் பந்து படுகின்ற தருணங்களில் அந்தப் பந்து முதலில் பேட்டில் படுவதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதி முறையின் அடிப்படையில் விராட் கோலி நிச்சயமாக அவுட் இல்லை என தெரியவருகிறது. இதனால் இதுபோன்ற மோசமான அம்பயர்களை ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் எப்படி பிசிசிஐ அனுமதிக்கிறது என்று நிறைய ரசிகர்கள் பேசுகின்றனர்.

இதையும் படிங்க : இரட்டைக்குழல் துப்பாக்கியாக சுட்ட தரமான தமிழக வீரர்கள் ! இப்போதாவது திருந்துமா சென்னை நிர்வாகம்

மேலும் இந்த விதிமுறையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு அம்பயரை சாடியுள்ளது. அத்துடன் இதைவிட சிறந்த அம்பயர்கள் எங்கள் நாட்டில் உள்ளதால் உங்களுக்கு வேண்டுமெனில் அனுப்ப தயார் என கத்துகுட்டி ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கலாய்த்துள்ளது.

Advertisement