உலக கோப்பை 2023 : ரோஹித் சர்மா அசால்ட்டா 2 சதம், ஒரு 150 ரன்கள் அடிப்பாரு – முன்னாள் இந்திய வீரர் அதிரடி கணிப்பு

Rohit Sharma
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது போல் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. அதற்கு சாதகமாக பும்ரா, கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Kohli-and-Rohit

- Advertisement -

இந்த நிலைமையில் இத்தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்கு ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது. ஏனெனில் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முதல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டதே தோல்வியை கொடுத்தது. அந்த நிலைமையில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் தான் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதிரடி கணிப்பு:
இருப்பினும் இங்கிலாந்தில் நடைபெற்ற கடந்த உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்து வெற்றிக்கு போராடிய அவர் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா குறைந்தபட்சம் 2 சதங்கள் ஒரு டாடி சதம் (150+ ரன்கள்) அடித்து சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ரோஹித் சர்மா 9800க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். அதில் 30 சதங்களை கிட்டத்தட்ட 49 என்ற சராசரியிலும் 90 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் அடித்துள்ள அவர் ஆசிய கட்டத்திலும் இதே புள்ளி விவரங்களை வைத்துள்ளார். எனவே ரோகித் இத்தொடரில் அசத்துவார் என்று நம்பலாம். குறிப்பாக 9 போட்டிகளில் விளையாடினால் அவர் குறைந்தது 2 சதங்கள் ஒரு டாடி சதம் அடிப்பார் என்று நம்புகிறேன். சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருந்தாலும் ரோகித் சர்மாவுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறியவர்”

- Advertisement -

“27 போட்டிகளில் 62 என்ற அளவில் இருக்கும் அவருடைய சராசரி ஆசிய கண்டத்தில் 64 என்றளவில் இருக்கிறது. மேலும் அவருடைய 4 சதங்களில் 3 ஆசிய கண்டத்தில் அடிபட்டுள்ளது. எனவே கில் மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து விளையாடுகிறார்கள். அவர்களைக் கடந்து சென்றால் தற்போதைய ஒரு நாள் கிரிக்கெட்டின் தந்தையான விராட் கோலி இருக்கிறார்”

Chopra

இதையும் படிங்க:விராட் கோலி பத்தி அவங்க சொன்னது சரி தான், அதை செஞ்சா இந்தியா 2023 உ.கோ ஜெயிக்க வாய்ப்பிருக்கு – ஏபிடி கருத்து

“275 போட்டிகளில் சுமார் 13000 ரன்களை 57 என்ற சராசரியில் குவித்துள்ள அவர் அடித்துள்ள 46 சட்டங்களில் 31 ஆசிய கண்டத்தில் வந்துள்ளது. குறிப்பாக ஆசிய கண்டத்தில் மட்டும் 7400க்கும் மேற்பட்ட ரன்களை 58 என்ற சராசரியில் குவித்துள்ளார். எனவே இந்த உலகக் கோப்பையில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவின் டாப் ஆர்டர் வலுவாகவே இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement