WTC Final : ஐபிஎல்’ல வேண்ணா சொதப்பிருக்கலாம் , ஃபைனலில் அவர் தான் இந்தியாவை ஜெயிக்க வைப்பாரு – மஞ்ரேக்கர் உறுதி

Sanjay
- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை முடிவு செய்யப்போகும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் விராட் கோலி கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளையும் விமர்சனங்களையும் நிறுத்த போராட உள்ளது.

Rohit Sharma

- Advertisement -

அதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஐபிஎல் தொடர் முடிந்ததும் படிப்படியாக இங்கிலாந்து சென்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நிலையில் இப்போட்டியில் வெல்வதற்கு பேட்டிங் துறையில் விராட் கோலி, புஜாரா, ரகானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. அதை விட ரோகித் சர்மா கேப்டனாக முன்னின்று மிகச் சிறப்பாக செயல்பட்டால் தான் இதர வீரர்களும் அதை பார்த்து உத்வேகமடைந்து வெற்றிக்காக போராடுவார்கள்.

மாஸ் காட்டுவாரு:
ஆனால் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்டு மும்பை பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறுவதற்கு ஒரு காரணமாக அமைந்தார். குறிப்பாக 3 முறை டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்று மோசமான சாதனையும் படைத்தார். அப்படி சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற தரமான ஆஸ்திரேலிய பவுலர்கள் இங்கிலாந்து சூழ்நிலையில் பிரயோகிக்கும் ஸ்விங் பந்துகளுக்கு தாக்குப் பிடிப்பாரா என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Rohit

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வேண்டுமானால் சுமாராக செயல்பட்டிருக்கலாம் ஆனால் இந்த ஃபைனலில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல போராடுவார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக இதே ஃபார்மில் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சவாலான நாக்பூர் மைதானத்தில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல் இப்போட்டியிலும் ரோஹித் அசத்துவார் என்ற நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

 

“ஐபிஎல் தொடரில் அவருடைய ஃபார்மை ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அத்தொடரில் ஃபார்மின்றி தவித்த அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்ததை நாம் பார்த்தோம். மேலும் விராட் கோலியை போலவே தமது கேரியரின் இந்த சமயத்தில் ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டிகள் மிகவும் பொருந்தக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங்கில் எந்த குறையுமே இல்லை”

- Advertisement -

Sanjay

“அதே சமயம் டெஸ்ட் போட்டிகளில் அவரிடம் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவெனில் தமக்கு மிகவும் பிடித்த ஃபுல் ஷாட்டை அடிக்க முயற்சித்து சில போட்டிகளில் ஆட்டமிழந்தார். அதனால் அவருக்கு எதிராக ஃபீல்டர்களை நிறுத்தி வைத்து எதிரணியினர் ஷார்ட் பந்துகளை வீசுகின்றனர். எனவே அதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய ஃபுல் ஷாட் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஏனெனில் அவருடைய பேக் லிஃப்ட் மேலே வருவதில்லை. அதனால் அவர் பந்தை கீழே இழுத்து அடிக்கிறார்”

இதையும் படிங்க:வீடியோ : அப்றம் நண்பா எப்டி இருக்க? பல வருடங்களாக கலாய்த்த பொல்லார்ட்டை – வம்படியாக கலாய்த்த ப்ராவோ

“மிகவும் குறைவான பேக் லிஃப்ட்டை கொண்டுள்ள அவர் பந்தை பின்பற்றி பவர் கொடுத்து அடிக்கிறார். ஆனால் அதற்காக அதே ஸ்டைலை டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தினால் பந்து காற்றில் செல்லும். எனவே இந்த பிரச்சனையை சரி செய்ய அவரிடம் 2 தீர்வுகள் உள்ளது. ஒன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்சர்களுக்கு தேவை கிடையாது என்பதால் பந்தை அடிக்காமல் விடலாம் அல்லது சிங்கிள், டபுள் மட்டும் எடுக்கலாம்” என்று கூறினார்.

Advertisement