உலக கோப்பைன்னு வந்தாலே அவர கைல பிடிக்க முடியாது, இந்தியாவ ஜெயிக்க வைப்பாரு பாருங்க – சேவாக் உறுதியான பாராட்டு

Sehwag
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

IND vs PAK World Cup

- Advertisement -

அதற்கேற்றார் போல் காயத்தை சந்தித்திருந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் குணமடைந்து உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் ஆசிய கோப்பை விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

சேவாக்கின் கணிப்பு:
எனவே இம்முறை கோப்பையை வெல்ல வேண்டுமெனில் டாப் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது. அதில் விராட் கோலி, கில் ஆகியோர் தற்சமத்தில் ஓரளவுக்கு நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் ரோகித் சர்மா தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வருகிறார்.

Rohit Sharma

ஆனாலும் ஐசிசி உலகக்கோப்பை என்றாலே ரோகித் சர்மா அபாரமாக செயல்படுவார் என்று கூறும் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் 2023 உலகக்கோப்பையில் அவர் அதிக ரன்கள் அடித்து வெற்றியை பெற்று கொடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் அடிப்பார்கள். ஏனெனில் இந்தியாவில் பேட்டிங்க்கு சாதகமான மைதானங்கள் இருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கும்”

- Advertisement -

“அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமேயானால் அது ரோகித் சர்மாவாக இருப்பார். இந்த தொடரில் அதிக ரன்கள் அடிப்பவர்களாக வேறு நாட்டை சேர்ந்த சில வீரர்கள் இருப்பார்கள். ஆனால் நான் ஒரு இந்தியனாக இருப்பதால் நிச்சயம் ஒரு இந்தியனையே தேர்ந்தெடுப்பேன். எனவே அது ரோஹித் சர்மா. உலகக் கோப்பை என்று வந்தாலே அவருடைய எனர்ஜி லெவல் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும் என்பதாலேயே நான் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுக்கிறேன். எனவே இம்முறை கேப்டனாகவும் இருக்கும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

Virender Sehwag

இதையும் படிங்க:பும்ரா முதல் சாம்சன் வரை யோயோ டெஸ்டில் கலந்து கொள்ளாத 5 இந்திய வீரர்கள் – காரணம் இதோ

“குறிப்பாக வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் பெரிய ரன்களை குவித்து அசத்துவார் என்று நம்புகிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல இங்கிலாந்தில் நடைபெற்ற கடந்த உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 648 ரன்கள் அடித்த ரோகித் சர்மா 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்து வெற்றிக்கு போராடினார். அப்படி வெளிநாட்டிலேயே அசத்திய அவர் பிறந்து வளர்ந்த இந்திய மண்ணில் நிச்சயமாக வெற்றிக்கு போராடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement