சீட்டுல எழுதி தரேன்.. பாண்டியா வந்தாலும் ரோஹித் தான் 2024 டி20 உ.கோ கேப்டன்.. முன்னாள் வீரர் கணிப்பு

Rohit Sharma Pandya
- Advertisement -

தென் ஆப்பிரிக்க தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று அறிவித்துள்ள பிசிசிஐ விராட் கோலியையும் மீண்டும் தேர்வு செய்துள்ளது.

முன்னதாக கடைசியாக நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு கேப்டன் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தது அதன் காரணமாக அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்க தேர்வுக் குழுவினர் முடிவு செய்ததாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்தன.

- Advertisement -

ரோஹித் தான் கேப்டன்:
அதற்கேற்றார் போல் ரோகித் மற்றும் விராட் ஆகிய இருவருமே கடந்த ஒன்றரை வருடங்களாக மேற்கொண்டு எந்த ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாமல் இருந்து வந்தனர். அதை விட 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித்தை அதிரடியாக நீக்கிய மும்பை பாண்டியாவை தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதனால் அதே போல 2024 டி20 உலகக் கோப்பையிலும் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அவர் காயமடைந்துள்ளதால் மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் பாண்டியா குணமடைந்து வந்தாலும் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தான் இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா உலக கோப்பையிலும் கேப்டனாக செயல்படுவார் என்று நான் கருதுகிறேன். இந்த தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தால் உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவார். ஒருவேளை அப்படி உலகக் கோப்பையில் விளையாடினால் ரோகித் சர்மா தான் கேப்டனாகவும் இருப்பார்”

இதையும் படிங்க: விட்டதை பிடிப்பாரு.. இனிமேல் ஆட்டம் வேற மாதிரி இருக்கும்.. இந்திய வீரருக்கு ஸ்ரீகாந்த் அதிரடி ஆதரவு

“அதனால் ஒருவேளை ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் அவர் கேப்டனாக இருப்பார் என்று நான் கருதவில்லை. இதுதான் ஏறத்தாழ நடக்கும் என்பதை நான் வேண்டுமானால் எழுதி தருகிறேன். நான் எதையும் கேரண்டியாக சொல்ல முடியாது. ஆனால் தற்போது அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ரோகித் சர்மா உலகக் கோப்பையில் கேப்டனாக இருக்க மாட்டார் என்று சொல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவாகும்” என்று கூறினார்.

Advertisement