இதோடு விட்றாதீங்க. அரையிறுதியிலும் எங்களை சப்போர்ட் செய்யுங்க – வெற்றிக்கு பிறகு ரோஹித் வேண்டுகோள்

Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் நேற்று மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 61 ரன்களையும், கேஎல் ராகுல் 51 ரன்களையும் குவித்தனர்.

Ind vs ZIm Suryakumar Yadav Sikander Raza

- Advertisement -

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 17.2 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் :

இது அனைத்து தரப்பிலும் எங்களுக்கு கிடைத்த அருமையான வெற்றி. நாங்கள் இதுபோன்ற வெற்றியைத்தான் எதிர்பார்க்கிறோம். நாங்கள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும் இந்த வெற்றியும் எங்களுக்கு முக்கியமான ஒன்று. சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு வந்ததிலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் விளையாடும் பொழுது எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனின் பிரஷரை எடுத்து விடுகிறார்.

fans

அவர் அதிரடியாக விளையாடும்போது அது அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் நம்பிக்கையை அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் எப்படி விளையாடுவார் என்று எங்களுக்கு தெரியும். இதேபோன்று அவர் அதிரடியாக விளையாடும்போது எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன் டைம் எடுத்துக்கொண்டு விளையாடலாம்.

- Advertisement -

சூரியகுமார் மிகவும் தன்னம்பிக்கையுடன் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய ஆட்டம் அணிக்கும் நல்ல பலத்தை அளிக்கிறது. அரையிறுதி போட்டியில் நாங்கள் மைதானத்திற்கு ஏற்ப மிகச்சிறப்பாக எங்களை தகவமைத்துக் கொள்வோம் என்று நினைக்கிறேன். நல்ல அணிக்கு எதிராக விளையாட இருப்பதால் அது நல்ல போட்டியாகவே இருக்கும்.

இதையும் படிங்க : கவலை படாதீங்க அவ்ளோ சீக்கிரம் ரிட்டையர் ஆகமாட்டேன் – ஆஸி வீரரின் முடிவை கலாய்க்கும் ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவிலும் இந்திய ரசிகர்கள் இங்கு வந்து எங்களுக்கு அளிக்கும் ஆதரவை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் எப்பொழுது எங்கு விளையாடினாலும் மைதானம் நிரம்பி காணப்படுகிறது. இதோடு இது நின்றுவிடாது, அரையிறுதியிலும் ரசிகர்கள் வந்து எங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். இங்கு வந்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement