- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின் மற்றும் டிராவிடை கடந்து சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியிலும் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அவரது இந்த மோசமான பேட்டிங் பார்ம் தொடர்ந்து வருகிறது.

ரோஹித் சர்மா நிகழ்த்தவுள்ள சாதனை :

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் விளையாட இருக்கும் ரோகித் சர்மா மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அசத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கும் ரோஹித் சர்மா முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.

அந்த வகையில் இதுவரை 266 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா மொத்தமாக 10,868 ரன்களை குவித்துள்ளார். இந்த போட்டியில் அவர் மேலும் 22 ரன்களை குவிக்கும் பட்சத்தில் முன்னாள் வீரரான ராகுல் டிராவிடின் அதிகபட்ச ரன்களான 10889 ரன்களை கடப்பார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் 132 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்களை விரைவாக குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களின் விளையாடியிருந்த போது 11000 ரன்களை குவித்திருந்தார்.

இதையும் படிங்க : விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எத்தனை சதங்களை அடிப்பார் – சுரேஷ் ரெய்னா அளித்த பதில்

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா 258 இன்னிங்ஸ்களில் 10868 ரன்களுடன் உள்ளார். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் இந்த 132 ரன்களை குவித்தால் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளுவார். இந்த பட்டியலில் விராட் கோலி 222 இன்னிங்ஸ்களில் 11000 ரன்களை குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -