விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எத்தனை சதங்களை அடிப்பார் – சுரேஷ் ரெய்னா அளித்த பதில்

Raina
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது ஒரு வெற்றியுடன் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்று கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

விராட் கோலி நிச்சயம் அசத்துவார் :

இந்த ஒருநாள் தொடர் முடிவடைந்த கையோடு துபாய்க்கு செல்லும் இந்திய அணியானது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று வெற்றி பெறப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் ஐசிசி கோப்பையை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் இந்திய அணியும் இந்த தொடருக்காக தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் ரன் குவிப்பார்களா? என்பதை பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

ஏனெனில் சமீப காலமாக பேட்டிங் பார்மின்றி தவித்து வரும் இவர்கள் இருவரும் எப்படி ரன் குவிக்கப்போகிறார்கள்? என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி நிச்சயம் 3 சதங்களை விளாசுவார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலி ஒரு வீரராக இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. அவர் என்னை பொறுத்தவரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக விளையாடுவார். அதிலும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது அவருக்கு பிடித்த ஒன்று. அதனால் நிச்சயம் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பொதுவாகவே ஐசிசி தொடர்களின் போது ரன் குவித்து வரும் அவர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : ரோஹித்தை தாண்டி விராட் கோலியை அந்த இடத்திற்கு கொண்டுவர கம்பீர் திட்டம் – வெளியான தகவல்

அந்த வகையில் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் என்னை பொருத்தவரை 3 சதங்களை விளாசுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்றாலும் மொத்தமே 5 ஆட்டங்கள் தான் விளையாடும் நிலை இருக்கும் வேளையில் அதில் மூன்று சதங்களை விராட் கோலி விளாசுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement