இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் இழந்தது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது.
ரோஹித் சர்மா வேண்டாம்.. விராட் கோலி தான் வேண்டும் :
ஏற்கனவே டி20 உலக கோப்பையை கடந்த ஆண்டு கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கும் வேளையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டதால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நோக்கி சில முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மை இழந்து தவித்து வரும் ரோகித் சர்மா கேப்டன்சியிலும் தடுமாறி வருவதால் அவர் கேப்டன் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தற்போது 37 வயதை எட்டியுள்ள ரோகித் சர்மா அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் விளையாட முடியாது என்கிற நிலையில் அவருக்கு பதிலாக புதிய வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற நிலைக்கு நிர்வாகம் சென்றுள்ளது.
இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மீண்டும் விராட் கோலியை டெஸ்ட் அணியின் கேப்டனாக பரிந்துரைத்துள்ளார். அது குறித்து வெளியான தகவலின் படி : விராட் கோலி ஆக்ரோஷமான கேப்டன்சியின் கீழ் இந்தியா பல டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் மீண்டும் அவரது தலைமையின் கீழ் டெஸ்ட் அணியை கொண்டுவர கௌதம் கம்பீர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது இருக்கும் ஜூனியர் வீரர்களுக்கு இன்னும் அனுபவம் தேவை என்பதால் அதுவரை விராட் கோலியிடம் கேப்டன்சியை ஒப்படைக்குமாறு அவர் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்த காரணத்தால் கடவுளே ஸ்ரேயாஸ்க்கு சான்ஸ் கொடுத்துட்டாரு.. அர்ஷ்தீப் வைரம் மாதிரி.. ஹர்பஜன் பேட்டி
இதன் காரணமாக அடுத்த நான்கு மாதங்களுக்கு பிறகு நடைபெறவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.



