இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் இந்தியா முன்னிலை வகிக்கும் அந்தத் தொடரின் 2வது போடி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முன்னதாக அந்தப் போட்டியில் 249 ரன்களை துரத்திய இந்தியா 19-2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அப்போது களமிறங்கிய ஸ்ரயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடிய 56 ரன்கள் குவித்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். ஆனால் அப்போட்டியில் விராட் கோலி காயமடைந்ததாலேயே தமக்கு வாய்ப்பு கிடைத்ததாக அவர் சொன்னது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்திய அவர் இந்திய மண்ணில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார்.
கடவுளே கொடுத்த வாய்ப்பு:
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று நினைத்து கடவுளே முதல் போட்டியில் வாய்ப்பு கொடுத்ததாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் கேஎல் ராகுல் விளையாடாததால் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைக்காததும், அர்ஷ்தீப் சிங் பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “அணி நிர்வாகம் அவரைத் தேர்ந்தெடுத்தது”
“இருப்பினும் அவரை விளையாட வைக்கலாமா அல்லது ஜெய்ஸ்வாலை விளையாட வைக்கலாமா என்ற கேள்வி அவர்களிடம் உள்ளது. தற்சமயத்தில் அவர்கள் இடது – வலது கை கலவையை விரும்புவதால் ஜெய்ஸ்வாலை அதிகமாக நம்புகிறார்கள். எனவே ஜெய்ஸ்வால் விளையாட விரும்புவதால் அவரை அணி நிர்வாகம் விளையாட விரும்பவில்லை. ஆனால் கடந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் தன்னை நிரூபித்த வீரர்”
அர்ஷ்தீப் வைரம்:
“அப்படி ஒரு வீரர் ரன்கள் அடித்து வாய்ப்புக்காக காத்திருக்கும் போது தன்னுடைய பார்வையில் நன்றாக தெரிவார். கடவுளும் அப்படியே கருதுவார். நீங்கள் வேண்டாம் என்று நினைத்த வீரர் தான் அதிரடியாக விளையாடி போட்டியை ஒரு தலைப்பட்சமாக இந்தியாவின் பக்கம் மாற்றினார். அர்ஷ்தீப் சிங் வைரம் போன்றவர் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன்”
இதையும் படிங்க: 156 ரன்ஸ்.. கில்கிறிஸ்டை முந்தி வரலாறு படைத்த கேரி.. இலங்கைக்கு தோல்வியை பார்சல் கட்டும் ஆஸி
“மிகவும் சிறப்பான பவுலரான அவர் போட்டியின் எந்த நேரத்திலும் நன்றாக பவுலிங் செய்யக் கூடியவர். கடந்த டி20 உலகக் கோப்பையில் 17 – 18 விக்கெட்டுகள் எடுத்த அவரைப் போன்ற வேகப்பந்து வீச்சாளர் அணியில் இருப்பது மிகவும் நல்லது. இந்தியாவுக்கு நல்ல பவுலராக செயல்படுவதற்கு தேவையான அனைத்து திறன்களும் அவரிடம் இருக்கிறது” என்று கூறினார்.



