- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 93 ரன்கள் தேவை.. சேவாக்கை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனையை நிகழ்த்த – ஹிட் மேனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்து சில தினங்களுக்கு முன்னர் அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 97 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 73 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். பெர்த் நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது 8 ரன்கள் மட்டுமே அடித்த அவரது பேட்டிங் மீது விமர்சனங்கள் எழுந்தன.

சேவாக்கின் சாதனையை முந்த காத்திருக்கும் ரோஹித் சர்மா :

அப்படி எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இரண்டாவது போட்டியிலேயே அட்டகாசமான இன்னிங்சை விளையாடி தனது பேட்டின் மூலம் விமர்சகர்களுக்கு பதிலளித்தார். அதனை தொடர்ந்து அக்டோபர் 25-ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்வார் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சில முக்கிய சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார். அது குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரரான சேவாக்கின் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் முறியடிக்க காத்திருக்கிறார்.

அதற்கு 93 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் அடுத்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ரோஹித் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக துவக்க வீரராக 351 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 376 இன்னிங்ஸ்களில் 15666 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணிக்காக 321 போட்டிகளில் துவக்க வீரராக விளையாடிய சேவாக் 388 இன்னிங்ஸ்களில் 15,758 ரன்கள் அடித்து துவக்க வீரராக இந்திய அணிக்கு அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார். அவரது இந்த சாதனையை முறியடிக்க இன்னும் ரோஹித் சர்மாவிற்கு 93 ரன்கள் மட்டுமே தேவை.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா தற்போது அவரது அந்த அப்ரோச்சை மாத்திட்டாரு.. இனிமே பெரிய ரன்கள் வரும் – சுனில் கவாஸ்கர் கருத்து

அப்படி 93 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் துவக்க வீரராக அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சேவாக்கை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா அந்த இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -