ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா தற்போது முழுநேர துவக்க ஆட்டக்காரராக இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
ரோஹித் சர்மாவின் பேட்டில் இருந்து இனி பெரிய ரன்கள் வரும் : சுனில் கவாஸ்கர்
இந்த தொடரின் முதலாவது போட்டியில் 8 ரன்கள் மட்டுமே அடித்த அவர் பெரிய ரன்களை அடிக்காமல் ஏமாற்றம் அளித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்து அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது 73 ரன்கள் அடித்து தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் காரணமாக மீண்டும் பார்முக்கு வந்துள்ள ரோகித் சர்மா நிச்சயம் மூன்றாவது போட்டியிலும் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தை சற்று தளர்த்தி கொண்டு அனுபவத்தை ஆட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளதால் இனி அவரது பேட்டில் இருந்து ரன்கள் வரும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது ரோகித் சர்மா அவரது அனுபவத்தை ஆட்டத்தில் கொண்டு வந்துள்ளார். கடந்த போட்டியின் போது சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் விரைவாகவே ஆட்டம் இழந்ததால் சூழலுக்கு என்ன தேவை? என்பதை கருத்தில் கொண்ட ரோகித் சர்மா தனது கியரை மாற்றி பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார்.
அதனால் அவரால் 73 ரன்கள் அடிக்க முடிந்தது. முன்பெல்லாம் முதல் பத்து ஓவர்களிலேயே அதிகளவு ரன்களை குவிக்க வேண்டும் என்று அதிரடியாக விளையாடி 20-25 பந்துகளில் 40-45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து விடுவார். ஆனால் தற்போது அவர் இந்திய அணிக்கு தேவை? என்ன என்பதை புரிந்து கொண்டு தனது கியரில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முந்த காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ
எனவே இனிவரும் போட்டிகளில் அவரால் அதிரடியான துவக்கத்தையும் வழங்க முடியும். அதேபோன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தால் நிதானமாகவும் விளையாட முடியும். அதனால் இனி அவரது பேட்டில் இருந்து பெரிய ரன்கள் நிச்சயமாக வரும் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



