- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முந்த காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் 8 ரன்களை மட்டுமே அடித்த அவர் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா :

அதனை தொடர்ந்து அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது 73 ரன்கள் குவித்து தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த போட்டியில் விளையாட இருக்கும் அவர் முன்னாள் இந்திய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் ஒரு முக்கிய சாதனையும் முறியடிக்க காத்திருக்கிறார். அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 1409 ரன்களை குவித்துள்ள ரோகித் சர்மா மேலும் 82 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 1491 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இவ்வேளையில் அவரது சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு 82 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த போட்டியையே ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சர்மாவுக்கு கடைசி போட்டியாக அமைய இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு பெரிய இன்னிங்ஸை அவர் விளையாடி விட்டு சாதனையுடன் ஆஸ்திரேலிய மண்ணில் இருந்து வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலி தன்னை ஃபார்மில் வெச்சுக்க.. ஸ்ரேயாஸ் வழியை ஃபாலோ பண்ணனும்.. ஃகைப் அட்வைஸ்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 24 ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -