பிறந்தநாளில் முடிஞ்சா அந்த கிஃப்ட் கொடு பாக்கலாம், இஷான் கிஷானை – கலாய்த்த ரோஹித் சர்மா (வீடியோ பாருங்க)

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. டாமினிகா நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலரான அஸ்வின் சுழலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இரண்டரை நாட்களில் ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்தது.

அதே போல அறிமுகப் போட்டியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் எடுத்து நிறைய சாதனைகளைப் படைத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் அப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற விக்கெட் கீப்பர் இசான் கிசான் முதல் இன்னிங்ஸில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கி 19 பந்துகள் வரை ரன்கள் எடுக்காமல் கடுப்பேற்றினார். மறுபுறம் டிக்ளேர் செய்வதற்காக காத்திருந்த ரோகித் சர்மா அவர் சிங்கிள் எடுத்த அடுத்த பந்திலேயே இந்தியாவின் இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக கோபத்துடன் அறிவித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

கலாய்த்த ரோஹித் சர்மா:
அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டி ஜூலை 20ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது. அதில் பங்கேற்பதற்காக குயின்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தை சென்றடைந்துள்ள இந்திய அணியினர் வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது 2வது போட்டியில் மாற்றங்கள் ஏதாவது நிகழுமா என வழக்கம் போல செய்தியாளர்கள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் பேட்டி எடுத்தனர். அவர்களுக்கு ரோகித் சர்மா பதிலளித்துக் கொண்டிருந்த போது ஜூலை 18ஆம் தேதி 25வது பிறந்த நாளை கொண்டாடிய இசான் கிசான் தமக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள் என்று வாயை விட்டார்.

அப்போது உனக்கு என்ன வேண்டும் என்று ஆரம்பத்தில் பதிலளித்த ரோகித் சர்மா முதலில் அணிக்காக நீ என்ன பரிசு கொடுக்கப் போகிறாய் என்று இஷான் கிஷானிடம் கூறினார். அத்துடன் உன்னுடைய பிறந்த நாள் பரிசாக முடிந்தால் 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த காட்டு என்றும் ரோகித் சர்மா பதிலளித்தார். அதாவது முதல் போட்டியில் 20 பந்துகளை எதிர்கொண்டு வெறும் சிங்கிள் மட்டுமே எதிர்கொண்ட இசான் கிசானை முடிந்தால் 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்குமாறு ரோகித் சர்மா சமயம் பார்த்து கலாய்த்தார்.

- Advertisement -

இது பற்றி பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உனக்கு என்ன பிறந்த நாள் பரிசு வேண்டும் தம்பி? உன்னிடம் தான் அனைத்தும் இருக்கிறதே. இதை நாம் அணியிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அந்த பரிசு அணியின் வெற்றியில் பங்காற்றும் அளவுக்கு இருக்க வேண்டும். எனவே நீ எங்களுக்காக 100 ரன்கள் அடித்து பிறந்தநாள் பரிசு கொடு” என்று கூறினார். மேலும் 2வது போட்டியில் இந்தியாவை வழி நடத்துவது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்தியாவை இந்த போட்டியில் வழி நடத்துவது மிகப்பெரிய கௌரவமாகும். ஏனெனில் இது போன்ற வாய்ப்புகள் உங்களுக்கு எல்லா நாட்களும் கிடைக்காது”

இதையும் படிங்க:IND vs WI : 2 ஆவது டெஸ்ட்டில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அணியில் இடம்பிடிக்கவுள்ள மாற்றுவீர்ர் – யார் தெரியுமா?

“இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளுமே மிகச் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி மகத்தான வரலாற்றை கொண்டுள்ளது. எனவே இந்த போட்டியில் அதை தவிர்த்து நான் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. மேலும் 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கொதித்தெழுந்து நல்ல போட்டியை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார். அத்துடன் 2வது போட்டிக்கான விளையாடும் 11 பேர் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றும் ரோகித் சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement