IND vs WI : 2 ஆவது டெஸ்ட்டில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அணியில் இடம்பிடிக்கவுள்ள மாற்றுவீர்ர் – யார் தெரியுமா?

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நாளை ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Ashwin

- Advertisement -

அதனை தொடர்ந்து நாளை துவங்க இருக்கும் இந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் நாளை துவங்க இருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில உறுதியான மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியிருந்தபோது அவரது இடத்தை அற்புதமாக நிரப்பியவர் அக்சர் பட்டேல்.

axar 2

பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் அவர் ஒரு ஆல்ரவுண்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்கும் விதமாக இந்த இரண்டாவது போட்டியில் அக்சர் பட்டேல் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போன்று வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவரது இடத்தில் நவ்தீப் சைனி அல்லது அறிமுக வீரராக முகேஷ் குமார் ஆகிய இருவரில் ஒருவர் விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : வீடியோ : 108 மீட்டர் முரட்டு சிக்சரை பறக்க விட்டு பவரை காட்டிய ரசல் – ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த லாஸ் ஏஞ்சல்ஸ்

மற்றபடி இந்த டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. முதல் டெஸ்ட் போட்டியை போன்றே இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்பது உறுதி. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் நூறாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement