மைதானத்தில் செய்த செயலால் ஓட்டுமொத்த ராசிகளையும் நெகிழவைத்த ரோகித் சர்மா !

sharma1

இந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்க்கு இடையே நடைபெற்ற டி20 தொடரில் பல ஸ்வாரசியமான நிகழ்வுகள் நடந்துள்ளது. நேற்று நடந்த இந்த தொடரின் இறுதி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

karthik

ஆரம்பம் முதலே இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.இதற்கு நன்றி கூறும் விதமாக தற்போதிய இந்திய அணி கேப்டன் ஹிட் மேன் ரோஹித் சர்மா இலங்கை நாட்டின் கொடியை கையில் ஏந்திக்கொண்டு மைதானத்தில் வளம்வந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இலங்கையில் நடைபெற்ற இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து இந்தியாவிற்கும்,இலங்கைக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வந்தது.

ஆனால் வங்கதேச அணியில் இருக்கும் சில வீரர்களின் செயல்கள் ரசிகர்களை ஆத்திரபடுத்தியது.மேலும் வங்கதேச அணி இலங்கையிடம் வெற்றிபெற்றதால் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.இதனால் ரசிகர்களுக்கு வங்கதேச ஆணியின் மீது இலங்கை ரசிகர்களுக்கு மேலும் வெறுப்பு அதிகரித்தது.இதனால் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இலங்கை ரசிகர்கள் இந்தியாவிற்கு ஆதரவை அளித்துவந்தனர்.

rohit

இதனால் இந்திய அணி இலங்கை ரசிகர்களின் இந்த செயலை மிகவும் மதித்தனர். மேலும் இலங்கை ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் மீது அன்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்றவுடன் கேப்டன் ரோஹித் சர்மா இலங்கை தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு வீரர்களுடன் மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களுக்கு தெறிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

- Advertisement -

 

https://twitter.com/iam_K_A/status/975438578305003520