இந்திய டி20 அணியில் விராட் கோலிக்கு என்டு கார்டு கொடுக்க இருக்கிறாரா ரோஹித் சர்மா – பேட்டியால் ஏற்பட்ட பரபரப்பு

Rohit-and-Kohli
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கடைசி இடம் பிடித்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் தொடரில் நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றிற்கு தகுதியானது மட்டுமின்றி எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நிச்சயம் மும்பை அணி குஜராத் அணியை இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வீழ்த்தி சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.

MI vs LSG

கடந்த ஆண்டு பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதால் கடைசி இடத்தை பிடித்த மும்பை அணி இந்த ஆண்டு ஓரளவிற்கு சுதாரித்து இறுதி கட்டம் வரை வந்துள்ளது. இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் அந்த பேட்டியில் ரோகித் சர்மா பேசியதாவது : பும்ரா, ஹார்டிக் பாண்டியா போன்ற வீரர்களை நாங்கள் தேர்ந்தெடுத்து அவர்களை தயார்படுத்துவோம் பின்பு மக்கள் ஒருநாள் எங்களை சூப்பர் ஸ்டார் அணி என்பார்கள். இதே கதைதான் திலக் வர்மா மற்றும் நேஹல் வதேராவுக்கும் நடக்கும் நிச்சயம் அவர்கள் இருவரையும் மக்கள் கொண்டாட துவங்குவார்கள்.

Virat Kohli

இது போன்ற டி20 தொடர்களில் ஒருசில பந்துவீச்சாளர்களை குறிவைத்து நம்மால் அடிக்க முடியும். ஆனால் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அனைவருமே மிகச் சிறப்பான திறமையுள்ள வீரர்களாக இருப்பார்கள். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி ஐந்து ஓவர்களில் 60 ரன்கள், 70 ரன்கள் எல்லாம் அடிக்க முடியாது.

- Advertisement -

எனவே டி20 கிரிக்கெட்டில் இனி ஆங்கர் ரோல் செய்யும் வீரருக்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறினார். அவர் கூறிய இந்த கருத்து தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : உங்க மேல அப்செட்டா இருக்கேன், அந்த இளம் வீரரை ஸ்டோனிஸிடம் அடிவாங்க விடலாமா? ரோஹித்தை விமர்சித்த சேவாக்

ஏனெனில் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலி மட்டுமே ஆங்கர் ரோல் செய்து வருகிறார். எனவே விராட் கோலியை நிராகரிக்க தான் ரோகித் சர்மா இது போன்று பேசினாரா என்று ரசிகர்கள் மத்தியில் இந்த விவகாரம் விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் இந்த ஐ.பி.எல் தொடரிலும் விராட் கோலி சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான ஒரு போட்டியில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement