IPL 2023 : உங்க மேல அப்செட்டா இருக்கேன், அந்த இளம் வீரரை ஸ்டோனிஸிடம் அடிவாங்க விடலாமா? ரோஹித்தை விமர்சித்த சேவாக்

Rohit Sharma Virender Sehwag
- Advertisement -

கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று துவங்கியுள்ளது. இத்தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை ஆரம்பத்தில் தடுமாறினாலும் 2வது பகுதியில் தங்களுடைய கடப்பாரை பேட்டிங்கை வைத்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சென்னையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சூரியகுமார் 33, கேமரூன் கிரீன் 41 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 183 ரன்களை வெற்றி இலக்காக நினைத்தது.

ஆனால் அதை துரத்திய லக்னோ சேப்பாக்கம் மைதானத்தில் தரமாக பந்து வீசிய மும்பைக்கு பதில் சொல்ல முடியாமல் 16.3 ஓவரிலேயே 101 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டோனில் மட்டும் போராடி 41(23) ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக 5 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த ஆகாஷ் மாத்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையடுத்து மே 26இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்ளும் மும்பை வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற போராட உள்ளது.

- Advertisement -

சேவாக் அதிருப்தி:
அந்த வகையில் கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்த மும்பையை மீண்டும் இம்முறை சிறப்பாக வழி நடத்தி இந்தளவுக்கு கொண்டு வந்துள்ள ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் பாராட்டுகளை பெற்று வருகிறது. இருப்பினும் லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ஸ்டோனிஸ் ஆரம்பகட்ட விக்கெட்டுகளால் ஏற்பட்ட அழுத்தத்தை உடைக்க காத்துக்கொண்டிருந்த போது பியூஸ் சாவ்லா போன்ற அனுபவமிக்கரை பயன்படுத்தாமல் ரித்திக் ஷாக்கின் போன்ற இளம் வீரரை பயன்படுத்திய ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் ஏமாற்றமளித்ததாக சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ரோகித் சர்மா மீது அப்செட்டாக இருக்கிறேன். ஏனெனில் இளம் வீரரான அவரிடம் (ரித்திக்) சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஸ்டோனிஸ் போன்ற ஒருவர் களத்தில் நன்கு செட்டிலாகி அடிப்பதற்கு தயாராக இருக்கும் போது 6வது ஓவரை பந்து வீச கொடுத்தீர்கள். அதை பயன்படுத்தி ஸ்டோனிஸ் அதிரடியாக ரன்களை (18 ரன்கள்) குவித்தார். அந்த சமயத்தில் எதிர்புறம் இடது கை பேட்ஸ்மேன் இருந்ததால் நீங்கள் ஸ்பின்னரைக் கொண்டு வந்த முடிவை நான் புரிந்து கொள்கிறேன்”

- Advertisement -

“ஆனால் அது போன்ற சமயங்களில் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கும் அனுபவிக்க பியூஸ் சாவ்லாவை நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவரை போன்ற அனுபவமிக்க வேறு ஏதேனும் பவுலரை பயன்படுத்தியிருந்தால் கூட அந்த ஓவரில் 6 – 8 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பீர்கள். மாறாக ரித்திக் ஷாக்கீன் வீசியதால் அந்த சமயத்தில் லக்னோவுக்கு ஏற்பட்டிருந்த மிகப்பெரிய அழுத்தம் உடைந்ததாக நான் கருதுகிறேன். ஆனால் நல்ல வேளையாக தண்ணீர் இடைவெளிக்கு பின் க்ருனால் பாண்டியா மோசமான ஷாட் விளையாடி தம்முடைய விக்கெட்டை பரிசளித்ததால் லக்னோவின் சரிவு ஏற்படுத்த வாங்கியது”

“அதனால் மும்பை வென்றாலும் அந்த சமயத்தில் ரோகித் சர்மா தவறு செய்ததாக நான் கருதுகிறேன். குறிப்பாக அந்த ஓவரை அவருக்கு நீங்கள் வழங்கியிருக்கக் கூடாது. மாறாக பவர் பிளே முடிந்த பின் அவரைப் போன்ற இளம் வீரரை நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IPL 2023 : இங்கிலிஷ் தெரியாம என்னை குறை சொல்லி திட்டாதீங்க, ரசிகர்களுக்கு கங்குலி பதிலடி – நடந்தது என்ன

இருப்பினும் அந்த கேப்டன்ஷிப் தவறையும் தாண்டி லக்னோ சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து குஜராத்தை வீழ்த்தி பரம எதிரியான சென்னையை ஃபைனலில் மும்பை எதிர்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement