IND vs WI : இதுபோன்ற சேன்ஸ் நெறைய கெடைக்காது. 7-ஆம் இடத்தில் களமிறங்கியது குறித்து – ரோஹித் கொடுத்த விளக்கம்

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றி பதிவு செய்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Jadeja

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்கள் மட்டுமே குவிக்க 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தனது இடத்தை இஷான் கிஷனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அதன் பின்னரும் இளம் வீரர்களையே களமிறக்கி விட்டு ஏழாவது வீரராக களம் இறங்கி விளையாடியிருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் ஏன் இப்படி ஏழாவது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினேன் என்பது குறித்தும் பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த மைதானம் இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

Rohit

நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீசி என்ன இலக்கு என்பதை தெரிந்து கொள்ள விரும்பினோம். அதேபோன்று இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என இரு தரப்பினரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பினேன். அந்த வகையில் எங்களது அணியின் பந்துவீச்சாளரும் சிறப்பாக பந்துவீசி அவர்களை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினர்.

- Advertisement -

இலக்கு எளிதாக எட்டக்கூடிய ஒன்று என்பதனால் நான் அணியில் மீண்டும் இணைந்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பை வழங்க நினைத்தேன். அந்த வகையில் என்னுடைய பேட்டிங் பொசிஷனை மாற்றி அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கி பரிசோதித்து பார்க்கலாம் என்றே நான் முன்கூட்டியே அனைவரையும் களமிறக்கி விட்டேன். இதுபோன்ற வாய்ப்புகள் ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய கிடைக்காது.

இதையும் படிங்க : IND vs WI : முதல் போட்டியிலேயே கபில் தேவின் மாபெரும் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்த – ரவீந்திர ஜடேஜா

எனவே நான் பின் வரிசையில் களமிறங்கி எனக்கு முன்னதாக அனைவருக்கும் வாய்ப்பினை வழங்கினேன் என வெற்றி குறித்து ரோகித் சர்மா பேசினார். மேலும் பந்துவீச்சாளர்கள் அனைவரும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதாலே இந்த போட்டியில் வெற்றி கிட்டியதாக அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement