IPL 2023 : அந்த பையன் ரொம்ப பிரமாதமா பேட்டிங் ஆடுறான். வெற்றிக்கு பின்னர் எதிரணி வீரரை – பாராட்டிய ரோஹித்

Rohit Sharma 1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

Jaiswal

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இப்படி ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க மிக முக்கிய காரணமாக அந்த அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் திகழ்ந்தார். இந்த போட்டியில் 62 பந்துகளை சந்தித்த அவர் 124 ரன்களை குவித்தார்.

பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றிருந்தாலும் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரரான ஜெய்ஸ்வாலுக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Jaiswal and Rohit

ஏனெனில் 62 பந்துகளை சந்தித்த அவர் 16 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் என 124 ரன்கள் எடுத்து தனி ஒருவராக மும்பை அணிக்கு பயத்தை காண்பித்தார். இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றி குறித்து பேசும்போது ஜெய்ஸ்வால் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு நான் அவரை பார்த்தேன் அப்போது சிறப்பாக விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு இன்னும் மிக அருமையாக விளையாடுகிறார். அவரது ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. நான் அவரிடம் உங்களுக்கு பவர் எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்டதும் அவர் நான் அதிகமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : IPL 2023 : எப்டியோ ஐபிஎல் தொடரால் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த கேப்டன் கிடைக்க போறாரு – நட்சத்திர வீரரை பாராட்டி பிரட் லீ பேட்டி

அவரது இந்த ஆட்டம் நிச்சயம் அவருக்கு மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் நல்லது என ரோகித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement