IPL 2023 : எப்டியோ ஐபிஎல் தொடரால் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த கேப்டன் கிடைக்க போறாரு – நட்சத்திர வீரரை பாராட்டி பிரட் லீ பேட்டி

Lee
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற 38வது லீக் போட்டியில் பஞ்சாப்பை சரமாரியாக வெளுத்து வாங்கிய லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 257/5 ரன்கள் குவித்து வரலாற்றில் 2வது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 54 (24) ஆயுஷ் படோனி 43 (24) மார்கஸ் ஸ்டோனிஸ் 72 (40) நிக்கோலஸ் பூரான் 45 (19) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பெரிய ரன்களை எடுத்தனர்.

LSG vs PBKS

- Advertisement -

அதை துரத்திய பஞ்சாப்புக்கு அதர்வா டைட் 66 (36) ரன்கள் எடுத்தது தவிர ஏனைய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 19.5 ஓவரில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக யாஷ் தாகூர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் அதிரடியாக 72 (40) ரன்களும் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவானை அவுட்டாக்கி 1 விக்கெட்டும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அடுத்த கேப்டன்:
இதே போல இந்த வருடம் இதுவரை களமிறங்கிய 8 போட்டிகளில் 216 ரன்களை 155.40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 5 விக்கெட்டுகளை எடுத்து வரும் அவர் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு லக்னோ அணியின் வெற்றிகளை முக்கிய பங்காற்றி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலும் பெரும்பாலும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் அவர் ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டனாக உருவெடுத்து வருவதாக முன்னாள் வீரர் பிரட் லீ பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Stoinis-1

“கேப்டனாக வளர்ந்து வரும் அவரிடம் சிறந்த கிரிக்கெட் மூளை இருக்கிறது. லக்னோ அணியில் அவர் மிகவும் ரிலாக்ஸாக விளையாடி வருகிறார். அவர் ஒரு வினோதமானவர் என்பதே பாராட்டுவதற்கு சிறந்த வழியாக இருக்கும். ஏனெனில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்தி வரும் அவர் பந்தை வேகத்துடன் எறியும் கைகளைக் கொண்டுள்ளார். அதே போல் கேட்ச்களையும் கச்சிதமாக பிடிக்கும் அவர் முழுமையான வீரர். அதே சமயம் இந்த போட்டியில் அவர் தன்னுடைய கிளாஸ் செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்”

- Advertisement -

“குறிப்பாக கடந்த போட்டியில் லக்னோ அணி கடினமான பிட்ச்சில் தடுமாறிய நிலையில் பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தை கொண்ட இந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார். மொத்தத்தில் அவர் இந்த போட்டியில் ஆல் ரவுண்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டார்” என்று பாராட்டினார். முன்னதாக 2021 டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக வென்று கொடுத்த கேப்டன் ஆரோன் பின்ச் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அதனால் ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து அணிக்கு இன்னும் அந்நாட்டு வாரியம் நிலையான கேப்டனை அறிவிக்கவில்லை.

Lee

அந்த நிலையில் ஏற்கனவே நிறைய இளம் வீரர்களை கண்டறிந்து கொடுத்து வரும் ஐபிஎல் தொடரிலிருந்து இந்தியாவுக்காக ஹர்திக் பாண்டியா போன்ற அடுத்த தலைமுறை கேப்டன்கள் கிடைத்துள்ளனர். அதே போல இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மார்கஸ் ஸ்டோனிஸ் வரும் காலங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான அனுபவத்தை கற்று வருவதாக பிரெட் லீ பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:RR vs MI : அவரோட ஸ்பெஷல் இன்னிங்ஸ் தான் நாங்க தோக்க காரணம் – சஞ்சு சாம்சன் வருத்தம்

அந்த வகையில் தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதே போல அசத்தும் பட்சத்தில் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை மே 1ஆம் தேதி லக்னோ எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement