MI vs SRH : இந்த சீசனை நாங்க நல்லா ஆரம்பிக்கல. ஆனா.. கடைசி போட்டியின் வெற்றிக்கு பிறகு – ரோஹித் அளித்த பேட்டி இதோ

Rohit Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் போட்டியானது நேற்று மதியம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

MI vs SRH

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரர்கள் மாயங்க் அகர்வால் 83 ரன்களையும், விவ்ரந்த் சர்மா 69 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 18 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக கேமரூன் கிரீன் 100 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் அந்த அணியை வெற்றி அழைத்து சென்றார்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மும்பை அணியானது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

Green

இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனநிலையுடன் தான் நாங்கள் களத்திற்கு வந்தோம். அதோடு இந்த வெற்றி எங்களுக்கு தேவையான ஒன்று. போட்டிக்கு முன்னரே அனைத்து வீரர்களிடமும் இது குறித்து தான் பேசி இருந்தேன். கடந்த ஆண்டு நாங்கள் ஆர்சிபி அணி பிளே ஆப் செல்வதற்கு வழிவகை செய்து விட்டோம்.

- Advertisement -

ஆனால் இம்முறை முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டி விரும்பினோம். இந்த சீசனை நாங்கள் சிறப்பாக துவங்கவில்லை. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தோம் ஆனால் அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றது எங்களுக்கு நல்ல மொமண்டத்தை கொடுத்தது.

இதையும் படிங்க : இந்த சீசன் முழுசா எங்ககிட்ட இந்த குறை இருந்தது உண்மைதான். பிளே ஆப் வாய்ப்பை இழந்த பிறகு – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

அதன் பின்னர் தேவையான போட்டிகளில் எங்களுக்கு வெற்றியும் கிடைத்து தற்போது நல்ல நிலையில் உள்ளது மகிழ்ச்சி என ரோகித் சர்மா கூறினார். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது எலிமினேட்டர் போட்டியில் வரும் 24-ஆம் தேதி லக்னோ அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement