இந்த சீசன் முழுசா எங்ககிட்ட இந்த குறை இருந்தது உண்மைதான். பிளே ஆப் வாய்ப்பை இழந்த பிறகு – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf-2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி 70-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது.

RCB vs GT

- Advertisement -

பெங்களூரு அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து 101 ரன்கள் குவித்தார். பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.1 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 104 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அதோடு மும்பை அணி நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

Kohli

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் கூறுகையில் : இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. நாங்கள் ஒரு பலமான அணியாகவே இந்த போட்டியில் விளையாடினோம். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து சுப்மன் கில் வெற்றியை பறித்து விட்டார்.

- Advertisement -

முதல் இன்னிங்சில் நாங்கள் விளையாடிய போது விராட் கோலி நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் அணிக்கு நல்ல ஸ்கோரை வழங்கினார். இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடி அனைத்தையும் மாற்றிவிட்டார். இந்த தொடர் முழுவதுமே எங்களுடைய டாப் ஆர்டரில் முதல் நான்கு வீரர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : IPL 2023 : எப்போ ரிட்டையர் ஆவிங்க? போட்டியே ரோஹித்துக்கும் எனக்கும் தான், டிகே’வின் சாதனையை கலாய்க்கும் ரசிகர்கள்

எங்களது லோயர் மிடில் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனிடம் இருந்தும் தொடர்ச்சியான பங்களிப்பு கிடைக்கவில்லை. இந்த தொடர் முழுவதுமே எங்களது மிடில் ஆர்டரில் பெரிய அளவில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததால் நாங்கள் சரிவை சந்தித்தோம். இன்னும் எங்களது அணியில் பின்வரிசையில் பினிஷிங் செய்யும் வீரர்களை பலப்படுத்த வேண்டும் என டூபிளெஸ்ஸிஸ் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement