IPL 2023 : எப்போ ரிட்டையர் ஆவிங்க? போட்டியே ரோஹித்துக்கும் எனக்கும் தான், டிகே’வின் சாதனையை கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 21ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் குஜராத்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் போராடி 197/8 ரன்கள் சேர்த்தது. டு பிளேஸிஸ் 28, மேக்ஸ்வெல் 11 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணியை நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மீண்டும் சதமடித்து 101* (61) ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 198 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சஹா 12 ரன்னில் அவுட்டானாலும் விஜய் சங்கர் 53 (35) ரன்கள் எடுக்க மறுபுறம் பெங்களூரு பவுலர்களை கடைசி வரை அவுட்டாகாமல் அடித்து நொறுக்கிய சுப்மன் கில் சதமடித்து 5 பவுண்டரி 8 சிக்ஸருடன் 104* (52) ரன்கள் விளாசி சதமடித்து 19.1 ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் லீப் சுற்றுடன் வெளியேறிய பெங்களூரு வரலாற்றில் 16வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. ஆனால் குஜராத் வெற்றி பெற்றதால் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

- Advertisement -

மோசமான சாதனை:
முன்னதாக இந்த போட்டியில் டு பிளேஸிஸ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாட விளையாட முயற்சித்து அவுட்டான போதிலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற விராட் கோலி சிறப்பாக செயல்பட்டும் கடைசி நேரத்தில் ஃபினிஷிங் செய்ய தவறிய பெங்களூரு 20 ரன்களை எக்ஸ்ட்ரா எடுக்காமல் விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதை அந்த அணிக்கு கச்சிதமாக செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் கோல்டன் டக் அவுட்டாகி சொதப்பி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

முன்னதாக 2019இல் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 2021 வாக்கில் வர்ணனையாளராக உருவெடுத்ததால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் கடந்த வருடம் 330 ரன்களை குவித்து பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றி இந்தியாவுக்காகவும் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தார். ஆனால் அழுத்தமான 2022 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் சொதப்பிய அவர் இந்த சீசனில் ஆரம்பம் முதலே மோசமாக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான நிச்சயம் வென்றாக வேண்டுமென்ற நிலைமையில் களமிறங்கிய கடந்த போட்டியிலும் டக் அவுட்டான அவர் இந்த போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற ரோகித் சர்மாவை முந்தி புதிய மோசமான சாதனையை படைத்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக முன்னின்று அதிரடி காட்ட வேண்டிய ரோஹித் சர்மாவும் இந்த சீசனில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக்கை மிஞ்சி டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார்.

அதனால் டக்மேன் என்று ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளான அவரை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நோஹிட் சர்மா என்று பெயரை மாற்றிக் கொள்ளுமாறு வெளிப்படையாகவே விமர்சித்தார். ஆனால் அப்படி தம்மை முந்தி மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மாவை மீண்டும் மிஞ்சியுள்ள தினேஷ் கார்த்திக் படைத்துள்ள மோசமான சாதனையின் பட்டியல் இதோ:
1. தினேஷ் கார்த்திக்: 17*
2. ரோஹித் சர்மா : 16
3. சுனில் நரேன்/மந்தீப் சிங் : தலா 15

இதையும் படிங்க:RCB vs GT : ஆர்சிபி’யின் ஈ சாலா கப் கனவை நொறுக்கிய சுப்மன் கில் – குஜராத் உதவியால் மும்பை பிளே ஆஃப் சென்றது எப்படி?

மொத்தத்தில் இந்தியாவின் முக்கிய சீனியர் வீரர்களான இந்த இருவரும் இந்த சீசனில் ஆரம்ப முதலே டக் அவுட்டாவதில் போட்டி போட்டு வந்த நிலையில் அதில் இறுதியாக “எனக்கு போட்டியே ரோகித் சர்மா தான்” என்ற வகையில் மோசமான சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்கின்றனர். அதை விட வாழ்வா – சாவா என்ற இந்த போட்டியிலும் சொதப்பியதால் உச்சகட்ட கோபமடைந்துள்ள பெங்களூரு ரசிகர்கள் எப்போது ஓய்வு பெறுகிறீர்கள் என்றும் உங்களை வர்ணனையாளராக பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

Advertisement