RCB vs GT : ஆர்சிபி’யின் ஈ சாலா கப் கனவை நொறுக்கிய சுப்மன் கில் – குஜராத் உதவியால் மும்பை பிளே ஆஃப் சென்றது எப்படி?

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்றின் கடைசி போட்டி மே 21ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்றது. மழையால் அரை மணி நேரம் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் குஜராத்தை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு எதிர்கொண்டது. அந்த நிலைமையில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து பேசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு விராட் கோலியுடன் இணைந்து 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரியுடன் 28 (19) ரன்களில் அவுட்டானார்.

ஆனால் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 11 (5) ரன்களிலும் மகிபால் லோம்ரர் 1 (3) ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 85/3 என தடுமாறிய அந்த அணிக்கு ஒருபுறம் விராட் கோலி நங்கூரமாக நின்று அரை சதமடிக்க எதிர்ப்புறம் வந்த மைக்கேல் பிரேஸ்வெல் 5 பவுண்டரியுடன் 26 (16) ரன்களில் நம்பிக்கை கொடுத்து அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் கோல்டன் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்ததால் தடுமாறி பெங்களூருவை தொடர்ந்து கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி காப்பாற்றிய விராட் கோலி வாழ்வா சாவா போட்டியில் சதமடித்து 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 101* (61) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

முடிந்த பெங்களூரு கனவு:
அவருடன் அனுஜ் ராவத் கடைசி நேரத்தில் அதிரடியாக 23* (15) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 197/5 என்ற நல்ல ஸ்கோரை எடுத்த நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 198 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சகா ஆரம்பத்திலேயே தடுமாறி 12 (14) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் இம்பேக்ட் வீரராக வந்த விஜய் சங்கர் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லுடன் இணைந்து நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதில் கடந்த போட்டியில் சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் இப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு அரை சதமடித்தார்

- Advertisement -

ஆனால் மறுபுறம் ஆரம்பத்தில் தடுமாறிய விஜய் சங்கர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் பேட்டை சுழற்றினால் எட்ஜ் வாங்கி நிறைய ரன்கள் கிடைத்தது. அதை பயன்படுத்தி 7 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (35) ரன்கள் குவித்த அவர் 2வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது வேலையை செய்து ஆட்டமிழக்க அடுத்து வந்த தசுன் சனக்கா டக் அவுட்டாகி சென்றார்.

அந்த நிலையில் வந்த டேவிட் மில்லர் 6 (7) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் தொடர்ந்து சிம்ம சொப்பனமாக மாறிய சுப்மன் கில் 5 பவுண்டரி 8 சிக்சருடன் 2வது முறையாக சதமடித்து 104* (52) ரன்கள் குவித்து பெங்களூருவின் லட்சிய முதல் கோப்பை கனவை சுக்குநூறாக உடைத்தார். அதனால் 19.1 ஓவரிலேயே 198/4 ரன்கள் எடுத்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 10வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை கடைசி வரை தனதாக்கியது.

- Advertisement -

ஆனால் வழக்கம் போல பேட்டிங்கில் விராட் கோலியின் உதவியுடன் பெரிய ஸ்கோர் எடுத்தும் பந்து வீச்சில் பவுலர்கள் வள்ளலாக செயல்பட்டதால் தோற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்த பெங்களூரு லீக் சுற்றுடன் வெளியேறி வரலாற்றில் 16வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது அந்த அணி ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இதையும் படிங்க:RCB vs GT : காலை வாரிய இதர வீரர்கள் – கிறிஸ் கெயில் ஆல் டைம் சாதனையை தூளாக்கி ஆர்சிபி’யை காப்பாற்றிய கிங் கோலி

குறிப்பாக சதமடித்தும் வெற்றி காண முடியாத விராட் கோலியின் முகத்தை பார்த்து அனைத்து ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர். இருப்பினும் அந்த வெற்றியால் தனது கடைசி போட்டியில் ஹைதராபாத்தை தோற்கடித்த மும்பை 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை எதிர்கொள்ள காத்திருக்கிறது.

Advertisement