MI vs PBKS : 215 ரன்கள் டார்கெட்டா இருந்தும் நாங்க ஜெயிக்க இந்த ரூல்ஸ் தான் காரணம் – ரோஹித் அளித்த பேட்டி இதோ

Rohit Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியானது நேற்று இரவு மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

MI vs PBKS

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக லியாம் லிவிங்ஸ்டன் 82 ரன்களையும், ஜித்தேஷ் ஷர்மா 49 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 18.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இஷான் கிஷன் 75 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.

SKY and Ishan Kishan

பின்னர் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : டி20 கிரிக்கெட் ஆரம்பித்தபோது 150 ரன்கள் வெற்றிக்கான போதுமான ரன்களாக இருந்தது. தற்போது இம்பேக்ட் ரூல்ஸ் வந்த பிறகு இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது.

- Advertisement -

எந்த ஒரு மைதானத்திலும் 180 ரன்கள் வெற்றிக்கு போதுமான ரன்கள் என்ற நிலை அதிகரித்துள்ளது. சூரியகுமார் யாதவ் கடந்த இரண்டு போட்டிகளாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வித்தியாசமான திசைகளில் அடிப்பதே அவரது பலமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்டம்பிற்கு பின்னால் அவர் மிகச் சிறப்பாக விளையாடுகிறார்.

இதையும் படிங்க : எங்களையும் இப்டி தான் நைஸா கழற்றி விட்டாங்க, விராட் – ரோஹித் கேரியர் பற்றி ஹர்பஜன் சிங் கவலை – காரணம் என்ன

இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பாக இந்த போட்டியில் விளையாடினர். நாங்கள் இந்த தொடரில் மூன்று, நான்கு முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement