எங்களையும் இப்டி தான் நைஸா கழற்றி விட்டாங்க, விராட் – ரோஹித் கேரியர் பற்றி ஹர்பஜன் சிங் கவலை – காரணம் என்ன

Harbhajan Singh
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் முதல் சாம்பியனாக 2007இல் எம்எஸ் தோனி தலைமையில் சாதனை படைத்த இந்தியா 15 வருடங்கள் கழித்து இன்னும் அடுத்த கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டாலும் நாக் அவுட் சுற்றில் முக்கிய தருணத்தில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்திருக்கும் இந்தியாவின் பரிதாப நிலைமை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபமிக்க ரோகித் சர்மா தலைமையில் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் மீண்டும் கொஞ்சமும் முன்னேறாமல் நாக் அவுட் சுற்றில் தோற்று வெளியேறியது.

Kohli-and-Rohit

- Advertisement -

அந்த தோல்விக்கு ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்ததால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இளம் அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதனால் கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற அனைத்து டி20 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் டி20 கேரியர் முடிந்ததாக அவர்களுடைய ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

ஹர்பஜன் கவலை:
குறிப்பாக சமீப காலங்களில் தடுமாறும் ரோகித் சர்மாவை வேண்டுமானால் கழற்றி விடுங்கள் ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி (82*) தற்போதைய ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதே தவிர டி20 கேரியர் முடியவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவுபடுத்தினார்.

Virat Kohli Rohit Sharma

இந்நிலையில் தங்களது காலத்தில் இதே போல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்று ஆரம்பத்தில் கூறி இறுதியில் கழற்றி விட்டது போல் விராட் கோலியின் டி20 கேரியரை பிசிசிஐ முடிக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தேர்வு குழுவினரின் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் நாம் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்லாமல் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கும் அழுத்தம் ஏற்படும்”

- Advertisement -

“அதன் தாக்கத்தை சீனியர் வீரர்கள் தான் சந்திப்பார்கள். குறிப்பாக நட்சத்திர வீரர்கள் உலக கோப்பையை வெல்லாவிட்டால் நாங்கள் இளம் வீரர்களை தேர்வு செய்து வளர்ப்போம் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் விராட் கோலியை பொறுத்த வரை தற்போதுள்ள ஃபார்மை வைத்து எப்படி கழற்றி விடுவீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. வேண்டுமானால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் அணியை உருவாக்க விரும்புகிறோம் என்று நீங்கள் அவரிடம் நேரடியாக பேசலாம்”

Harbhajan

“குறிப்பாக கழற்றி விடும் முடிவை எடுத்து விட்டு பின்னர் அதை நீங்கள் சீனியர் வீரர்களிடம் சொல்வதற்கு பதிலாக முன்கூட்டியே சொல்ல வேண்டும். ஏனெனில் எங்களுடைய காலத்தில் நாங்களும் இதே போல் ஒதுக்கப்பட்டதை நேரடியாக அல்லாமல் செய்தித்தாள்களில் தான் அறிந்து கொண்டோம். எனவே அது போன்ற நிலைமை விராட் கோலிக்கு ஏற்படக்கூடாது. அவர் மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு தேவையான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் சரியாக தொடர்பு கொள்வது தான் முக்கியமாகும்”

இதையும் படிங்க:IPL 2023 : ரிஷப் பண்ட் வேற இல்ல, அவர் எப்போ வேணாலும் இந்திய அணிக்கு தேர்வாகலாம் – இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி

“அதை சரியாக செய்தால் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவினர் இடையே நல்ல உறவு இருக்கும். ஏனெனில் ஒருவர் ஒதுக்கப்பட்டதை நீங்கள் அவரிடம் தெரிவிக்காமல் போனால் அது ஒவ்வொரு வீரர்களிடமும் கசப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார். அதாவது தற்போது கழற்றி விட முடியாத அளவுக்கு டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் ஒருவேளை அந்த முடிவை எடுத்தால் அதை முன்கூட்டியே அவரைப் போன்ற ஜாம்பவான் வீரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement