IPL 2023 : ரிஷப் பண்ட் வேற இல்ல, அவர் எப்போ வேணாலும் இந்திய அணிக்கு தேர்வாகலாம் – இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

மிகுந்த போட்டியுடன் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் தங்களுடைய முதல் 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து போராடி வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்காக விளையாடும் முனைப்புடன் போராடி வரும் பல வீரர்களுக்கு மத்தியில் பஞ்சாப் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடும் ஜித்தேஷ் சர்மாவும் அதிரடியாக பேட்டிங் செய்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 2013 முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி கடந்த 2022 சீசனில் முதல் முறையாக பஞ்சாப் அணியில் வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.

லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர் கடந்த சீசனில் 10 இன்னிங்ஸில் 234 ரன்களை 163.08 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி முடிந்தளவுக்கு பஞ்சாப் அணியின் வெற்றிகளில் பங்காற்றி முதல் முறையாக அனைவரது கவனத்தை எடுத்தார். குறிப்பாக தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலக கோப்பையில் ஜித்தேர் சர்மாவை விக்கெட் கீப்பராக தேர்வு செய்வேன் என்று அப்போது சேவாக் பாராட்டும் அளவுக்கு அசத்திய அவர் இந்த வருடமும் முதல் 9 போட்டிகளில் 190 ரன்களை 162.39 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து வருகிறார்.

- Advertisement -

சாஸ்திரி பாராட்டு:
குறிப்பாக லக்னோவுக்கு எதிராக வெறும் 10 பந்துகளில் 3 சிக்ஸருடன் 24 ரன்களை விளாசிய அவர் சென்னைக்கு எதிரான போட்டியிலும் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (10) ரன்களை விளாசி அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். அதிலும் அரை சதம் போன்ற தன்னுடைய சொந்த சாதனைகள் மற்றும் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவருடைய ஸ்டைல் ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் இல்லாத இந்த சமயத்தில் அதிரடியாக விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா எந்த நேரத்திலும் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு தேர்வாக வாய்ப்புள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் இந்த ஐபிஎல் தொடரின் கண்டுபிடிப்பாக கிடைத்துள்ள ஜிதேஷ் சர்மா தேர்வாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் ஐபிஎல் தொடரின் ஒரு கண்டுபிடிப்பாக திகழ்கிறார். துரதிஷ்டவசமாக ரிசப் பண்ட் காயமடைந்துள்ள நிலையில் இந்த பையன் எப்போது வேண்டுமானாலும் இந்திய அணிக்குள் நுழையலாம். ஏனெனில் லோயர் ஆர்டரில் அற்புதமாக விளையாடும் அவரிடம் பயம் கொஞ்சமும் இல்லை. கடந்த 2 – 3 போட்டிகளில் சிகர் தவான் காயத்தால் பங்கேற்காததை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் அந்த போட்டிகளில் இவர் தனது அற்புதமான திறமையால் அபாரமாக செயல்பட்டார். இத்தனைக்கும் அவர் வெறும் 20 – 25 ரன்கள் தான் அடிக்கிறார். ஆனால் அவ்வாறு அதிரடியாக அடிக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணம் சிறப்பானது” என்று கூறினார்.

முன்னதாக காயமடைந்த ரிசப் பண்ட்டுக்கு பதிலான மாற்று வீரராக இந்திய அணியில் செயல்படும் அளவுக்கு ஜிதேஷ் சர்மாவிடம் திறமை இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இதே போல சமீபத்தில் பாராட்டியிருந்தார். அந்த நிலையில் ஏற்கனவே சீனியர் வீரர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இளம் அணியை உருவாக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ள பிசிசிஐ இவருக்கு வாய்ப்பளித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:LSG vs CSK : கேப்டனா பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே மோசமான சாதனையை படைத்த க்ருனால் பாண்டியா – விவரம் இதோ

எனவே ஒரு வருடம் மட்டுமல்லாமல் தொடர்ந்து 2வது வருடமும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜிதேஷ் சர்மாவை விரைவில் இந்திய அணியில் பார்ப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகி வருகிறது.

Advertisement