LSG vs CSK : கேப்டனா பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே மோசமான சாதனையை படைத்த க்ருனால் பாண்டியா – விவரம் இதோ

Krunal-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

CSK vs LSG

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்த போது போட்டியில் மழை குறிக்கிட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழையின் நிற்காததால் இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டது.

அதே வேளையில் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கே எல் ராகுல் அணியிலிருந்து வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக கக்ருனால் பாண்டியா இந்த போட்டியில் கேப்டனாக அறிமுகமாகினார்.

Krunal Pandya 1

இந்நிலையில் கேப்டனாக ஐபிஎல் தொடரில் முதல்முறையாக அறிமுகமாகி விளையாடிய க்ருனால் பாண்டியா தான் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே மோசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் கேப்டனாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே டக் அவுட்டான மூன்றாவது வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக கடந்த 2008-ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டனாக அறிமுகமான வி.வி.எஸ் லக்ஷ்மணன் தனது முதல் போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார். அதேபோன்று இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற மார்க்ரம் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகியிருந்தார்.

இதையும் படிங்க : IPL 2023 : சிஎஸ்கே எவ்ளவோ பரவால்ல – ஐபிஎல் வரலாற்றில் மும்பை படைத்த மோசமான சாதனையை 2 மணி நேரத்தில் சமன் செய்த பஞ்சாப்

அதனை தொடர்ந்து நேற்று சென்னை அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக அறிமுகமான க்ருனால் பாண்டியா முதல் போட்டியிலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement